Menu
Your Cart

லாபத்தை பெருக்கும் நுண்ணுயிர்கள்

லாபத்தை பெருக்கும் நுண்ணுயிர்கள்
-5 % Out Of Stock
லாபத்தை பெருக்கும் நுண்ணுயிர்கள்
₹143
₹150
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் விவசாயத்தில், இயற்கைவழி விவசாயம் மீண்டும் புத்துயிர் பெற்றுவருகிறது. செழிக்கும் நிலங்களெல்லாம் ரசாயன உரங்களால் மண் வளம் கெட்டு விளைச்சல் குறைந்து வந்த நிலையில் இயற்கை விவசாயம் பற்றிய புரிதல் பரவலாகிவருவது வேளாண் மக்களுக்கு ஆறுதல் தருகிறது. பஞ்சகவ்யா கரைசல் போன்ற இயற்கை விவசாயத்துக்கு உதவும் வழிமுறைகளால், விளைநிலங்களில் இன்று பயிர்கள் செழித்து வளர்கின்றன. அந்த வரிசையில் இ.எம் எனப்படும் நுண்ணியிர்களைக் கொண்டு உருவாக்கப்படும் கரைசலும் தற்போது விவசாயத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. துர்நாற்றம் ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் மற்றும் தீமை செய்யும் நுண்ணுயிர்களை அழித்து, நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கும் என்பதால் உலகின் பல நாடுகளில் பிளீச்சிங் பவுடர் மற்றும் குளோரின் பயன்பாட்டுக்கு மாற்றாக இ.எம். கரைசலைப் பயன்படுத்துகிறார்கள். நுண்ணுயிர்களைக்கொண்டு உருவாக்கப்படும் இ.எம் செய்முறை, விவசாயத்தில் பயன்படுத்தி நல்ல விளைச்சலைப் பெறுவது எப்படி, இ.எம்மை வேறு எவற்றுக்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை விளக்கி பசுமை விகடனில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்போடு புதிய தகவல்களைக் கொண்டுள்ளது இந்த நூல். இயற்கை விவசாயம் வளர வலியுறுத்தும் இந்த நூல் விவசாயிகளுக்குப் பெரும் பயன்தரும்.
Book Details
Book Title லாபத்தை பெருக்கும் நுண்ணுயிர்கள் (laabaththai perukkum nunnuyirkal)
Author முனைவர் அ.உதயகுமார்
ISBN 9788194946540
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Published On Jun 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Agriculture | வேளாண்மை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha