-5 %
லீ குவான் யூ: சிங்கப்பூரின் சிற்பி
எஸ்.எல்.வி.மூர்த்தி (ஆசிரியர்)
₹285
₹300
- Year: 2016
- ISBN: 9789384149826
- Page: 272
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி படிப்படியாக ஒரு பிரமாண்டமான ராஜ்ஜியத்தைக் கட்டி முடித்த ஒரு கதாநாயகனின் கதை இது. முதல் முறையாக பிரதமராக லீ குவான் யூ பதவியேற்றபோது சிங்கப்பூரில் அடிப்படை கட்டுமானம்கூட இல்லை. பெரும்பாலான மக்கள் குடிசைகளில்தான் வசித்து வந்தார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருந்தது. நோய்கள், திருட்டுகள், குற்றங்கள் பெருகிக்கொண்டிருந்தன. இன்று சிங்கப்பூர் ஒரு சொர்க்கபுரியாக மாறியிருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் லீ குவான் யூ. அவநம்பிக்கை, தயக்கம், அச்சம் அனைத்தையும் நகர்த்தி வைத்துவிட்டு சிங்கப்பூரைக் கட்டியமைக்கத் தொடங்கினார் லீ. தரமான கல்வி, நல்ல வாழ்க்கைத் தரம், வலுவான பொருளாதாரம், ஊழலற்ற அமைப்பு, ஒழுங்கு, தூய்மை என உலகத்துக்கே ஒரு முன்மாதிரி நாடாக சிங்கப்பூரைக் கட்டமைத்தார் லீ. அவருடைய மன உறுதி, தொலைநோக்குப் பார்வை, திட்டமிடும் திறன், ஆளுமைப் பண்புகள், ராஜதந்திரம் ஆகியவற்றை சிங்கப்பூர் மட்டுமல்ல, உலகமே வியந்து இன்று பாராட்டுகிறது. மக்கள் நலனில் அக்கறைகொண்ட ஒரு தலைவரிடம் முழுமையான அதிகாரம் கிடைத்தால் ஒரு நாட்டை எப்படி முன்னேற்றமுடியும் என்பதற்கு லீ குவான் யூ ஒரு தலைசிறந்த உதாரணம். லீ குவான் யூவின் அசாதாரணமான வாழ்க்கையை நவீன சிங்கப்பூரின் வரலாற்றோடு சேர்த்து சுவைபட எழுதியிருக்கிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி. தினமணி.காமில் வெளிவந்த தொடரின் செழுமைப்படுத்தப்பட்ட வடிவம் இது. ஒரு வலுவான, வளமான தேசத்தை உருவாக்கவேண்டும் என்று கனவு காணும் அனைவரும் அவசியம் வாசிக்கவேண்டிய ஒரு நூல்.
Book Details | |
Book Title | லீ குவான் யூ: சிங்கப்பூரின் சிற்பி (Lee Kuan Yew Singaporin Sirpi) |
Author | எஸ்.எல்.வி.மூர்த்தி (S.L.V.Murthy) |
ISBN | 9789384149826 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 272 |
Year | 2016 |