Menu
Your Cart

லெனின் சந்தித்த நெருக்கடிகள்: பயங்கரவாதம்-போர்-பேரரசு-காதல்-புரட்சி (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)

லெனின் சந்தித்த நெருக்கடிகள்: பயங்கரவாதம்-போர்-பேரரசு-காதல்-புரட்சி (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
-5 %
லெனின் சந்தித்த நெருக்கடிகள்: பயங்கரவாதம்-போர்-பேரரசு-காதல்-புரட்சி (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
தாரிக் அலி (ஆசிரியர்), க.பூரணச்சந்திரன் (தமிழில்)
₹570
₹600
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அக்டோபர் புரட்சியின் விளைவுகளில் ஒன்றான சோவியத் அரசு வீழ்ந்து பட்டது என்பது குறித்தான தெளிவான ஓர்மையுடன் உலகமெங்கும் இன்று சோஷலிச சக்திகள் எதிர்கொண்டு வரும் புதிய சூழல்களையும் நெருக்கடிகளையும் முன்னிறுத்தி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இது இந்நூலின் குறிப்பிடத்தக்க சிறப்பாகும். மாபெரும் ரஷ்யப் புரட்சியின் தலைவரான விளாதீமிர் லெனினது வாழ்க்கைக் காலத்தையும் அக்டோபர் புரட்சியின் வரலாற்றுச் சூழலையும் இந்நூல் தழுவி நிற்கிறது என்ற போதிலும்,இன்றைய சூழல்களுக்கு ஏற்ப அன்றைய நெருக்கடிகளைத் தகவமைத்து வழங்கும் பணியினை இந்நூலின் ஆசிரியர் மிக அற்புதமாக மேற்கொண்டு இந்நூலை உருவாக்கியுள்ளார். ரஷ்யப் புரட்சியும் லெனினும் அக்காலத்தில் சந்தித்த சில முக்கியமான நெருக்கடிகளைக் குறிப்பாக அடையாளப்படுத்தி, அவற்றைத் தனித்து எடுத்துக் கோட்பாட்டுத் தளத்தில் ஆசிரியர் விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளார். நூலின் ஆசிரியரான தாரிக் அலி பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்து மார்க்சியராக உருவாகியவர். பள்ளிப் பருவத்திலேயே முற்போக்கு எழுத்தாளர்களுடன் கவிதை அரங்கங்களில் பங்குகொண்டு உரத்த குரலில் மயகோவ்ஸ்கியின் கவிதைகளை வாசித்த அனுபவங்களை இன்றும் அவர் நினைவு கூர்கிறார். தாரிக் அலியின் குடும்பம் இங்கிலாந்து நாட்டுக்குக் குடிபெயர்ந்தபோது அவர் அங்கு ஒரு பிரிட்டிஷ் மார்க்சியர் ஆனார்.பிரிட்டிஷ் இடதுசாரி அரசியலில் நேரடிப் பங்கேற்பு கொண்டவராகவும் மத்தியக் கிழக்கு மற்றும் தெற்கு ஆசிய அரசியல்களில் அக்கறை கொண்டவராகவும் அவர் பரிணமித்தார். இரு அடிப்படை வாதங்களின் மோதல் என்ற அவரது நூல் இஸ்லாமியருக்கு எதிரான மேற்கத்தியப் பேரரசுகளின் சமீபத்திய ஆக்கிரமிப்புகளைத் தோலுரித்துக் காட்டும் நூல். லண்டனில் இருந்து வெளியாகும் நியூ லெஃப்ட் ரிவ்யூ பத்திரிக்கையின் நீண்ட கால ஆசிரியர் குழு உறுப்பினர்களில் தாரிக் அலியும் ஒருவர். நாடகம், திரைப்படம், நாவல் மற்றும் கவிதை இலக்கியங்களில் தாரிக் அலி தனது கனதியான பங்களிப்புகளை வழங்கியுள்ளார். குறைந்தபட்சம் நான்கு பிரச்சினைகளை இந்நூலில் தாரிக்அலி எடுத்துப் பேசியுள்ளார்.
Book Details
Book Title லெனின் சந்தித்த நெருக்கடிகள்: பயங்கரவாதம்-போர்-பேரரசு-காதல்-புரட்சி (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) (lenin-santhiththa-nerukkadigal)
Author தாரிக் அலி (Thaarik Ali)
Translator க.பூரணச்சந்திரன் (Ka.Pooranachchandhiran)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, மார்க்சியம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கடந்த பத்தாண்டுகளாகத் தற்காலச் சமூகத்தின் குழூஉக்குறியாகப் பின்நவீனத்துவம் இருந்து வருகிறது. ஆனால் அதனை எவ்வாறு வரையறுப்பது? இந்த மிகச் சுருக்கமான அறிமுகத்தில் பின்நவீனத்துவவாதிகளின் அடிப்படைக் கருத்துக்களையும் கோட்பாடுகள், இலக்கியம், காட்சிக் கலைகள், திரைப்படம், கட்டடக்கலை, இசை போன்றவற்றுடன் அவர்கள..
₹124 ₹130
இந்தச் சுருக்கமான அறிமுகம், சமகால இறையியலின் மையமான கேள்விகள் பற்றிய சமச்சீரான ஆய்வை, நம்பிக்கையாளர்கள், அவநம்பிக்கையாளர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் அளிக்கிறது. டேவிட் ஃபோர்டின் விசாரனை ரீதியிலான அணுகுமுறை, பெரும்பாலான பெரிய மதங்களில் பிரதானமாக அமைந்திருக்கும் ஈடேற்றம், பழங்கால, நவீன, பின்நவீனச் சூ..
₹114 ₹120