Menu
Your Cart

எம். கே. தியாகராஜ பாகவதர்

எம். கே. தியாகராஜ பாகவதர்
-5 %
எம். கே. தியாகராஜ பாகவதர்
ஜெ.ராம்கி (ஆசிரியர்)
₹122
₹128
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வெள்ளித்திரைக்கு வந்த பிறகு பிரபலமடைந்தவர் அல்ல பாகவதர்.  நாடகத்துறையில் இருந்தபோதே வெற்றியின் உச்சத்தைத் தொட்டவர். அதன் காரணமாகவே வெள்ளித்திரைக்கு வந்து, வசூல் நாயகனாகவும் வலம் வந்தவர். பொதுவாக பாகவதர் என்றால் மன்மத லீலை பாடலைப் பற்றிப் பேசுவார்கள். ஆண்டுக்கணக்கில் அவர் படங்கள் ஓடின என்பார்கள். மிஞ்சிப்போனால், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பற்றி மேலெழுந்த வாரியாகப் பேசுவார்கள். ஆனால் அதையும் தாண்டி பாகவதரின் வாழ்க்கையில் பேசுவதற்குப் பல விஷயங்கள் உள்ளன என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு சாட்சி. வெற்றிக்கோட்டையில் உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்திருந்த பாகவதரை லட்சுமிகாந்தன் கொலை வழக்கு என்ற ஒற்றை வழக்கு தோல்வியின் அதளபாளத்துக்குக் கொண்டு வந்த விதத்தை நேர்மையாகப்  பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் ஜெ. ராம்கி. ஒருவகையில், பாகவதரின் வாழ்க்கை ஒவ்வொரு திரைக்கலைஞருக்கும் பாடம். பாகவதரின் கலை வாழ்க்கையை வாசிக்கும்போது நாடகங்கள் எவ்வாறு நடத்தப்பட்டன, அதை மக்கள் எப்படி ரசித்தார்கள், நாடகம் ஏன் திரைப்படமாக எடுக்கப்பட்டது, நாடகத்தை ரசித்தவர்கள் சினிமாவை எப்படி ஏற்றுக் கொண்டார்கள், நடிகர்களை எப்படிக் கொண்டாடினார்கள், ஒரு சூப்பர்ஸ்டார் உருவானது எப்படி? என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள இந்தப் புத்தகம் ஓர் உரைகல்.
Book Details
Book Title எம். கே. தியாகராஜ பாகவதர் (M K Thiyagaraja Bagavadhar)
Author ஜெ.ராம்கி (Je.Raamki)
ISBN 9789382578734
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 136
Year 2015

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஜெயலலிதா: அம்மு முதல் அம்மாவரைஎப்படி எம்.ஜி.ஆரை நீக்கிவிட்டுத் தமிழ அரசியல் சரித்திரம் பேசமுடியாதோ, அப்படிதான் ஜெயலலிதாவை விலக்கிவிட்டும் முடியாது.ஒரு நடிகையாத் தமிழக மக்களுக்கு அறிமுகமாகி, எம்.ஜி.ஆருக்குப் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் கட்சியை அதன் சிதைவிலிருந்து மீட்டுக் கா..
₹162 ₹170
ஆயிரக்கணக்கானோர் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோரின் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். குழந்தை, முதியோர் என்றெல்லாம் பேதம் பார்க்காமல் வீட்டோடு சேர்த்து கொளுத்திய சம்பவங்கள் ஏராளம். ஒருவரை அழிப்பதற்கு அவர் ஒரு ..
₹166 ₹175
மிகுந்த பரபரப்போடு செய்தித்தாள்களில் வாசித்திருப்போம். தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று வியப்போடு நிறையவே விவாதித்திருப்போம். அதன்பின் மெல்ல, மெல்ல நம் நினைவுகளிலிருந்து இந்தச் செய்திகள் மங்கி ஒரு கட்டத்தில் மறைந்தே போயிருக்கும். பிரேமானந்தா, ராம்விலாஸ் வேதாந்த..
₹228 ₹240