Menu
Your Cart

ஊழின் அடிமையாக: வேட்கை தணிக்கும் பெண்ணின் சுயசரிதை | Comfort Woman

ஊழின் அடிமையாக: வேட்கை தணிக்கும் பெண்ணின் சுயசரிதை | Comfort Woman
-5 %
ஊழின் அடிமையாக: வேட்கை தணிக்கும் பெண்ணின் சுயசரிதை | Comfort Woman
₹261
₹275
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்த நூல் ஒரு கொடுமையை எடுத்துச் சொல்கிறது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பெண்கள், ஜப்பானிய இராணுவத்தினர்களுக்குப் பாலியல் அடிமைகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். மரியா பாலியல் அடிமையான போது அவரது வயது பதினாறு. இரண்டாம் உலகப்போரின் போது நடந்த இந்தக் கொடூரத்தை முதன்முதலாக வெளிக்கொணர்ந்தவர் பிலிப்பைன்ஸ் தேசத்தைச் சேர்ந்த மரியா. இராணுவத்தால் பிடிக்கப்பட்டு, பாலியல் அடிமை ஆக்கப்பட்ட முதல்நாளே இருபத்து நான்கு படையினர்கள் மரியாவை வல்லுறவு செய்கிறார்கள். அப்போது அவர் பருவமடைந்திருக்கவில்லை. அதனால் ஜப்பானியருக்கு இருந்த அனுகூலம் என்னவென்றால் மற்றப் பெண்களுக்கு அளிக்கும், நான்கைந்து நாட்கள் மாதாந்திர விடுமுறையைக் கூட அவருக்குத் தர வேண்டியதில்லை. பல மாதங்கள், மரியா பாலியல் அடிமையாக இருந்திருக்கிறார். அதற்குள் ஆயிரக்கணக்கான ஜப்பானியப் படையினர்கள் அவரது உடலை பாலியல் ரீதியான சித்திரவதைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். ஒருமுறை எதிர்பாராத பாலியல் வல்லுறவு நடந்தாலே அந்தக் கொடுங்கனவுகள் வாழ்க்கை முழுதும் தொடர்ந்து வருகின்றன என்று பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருக்கிறார்கள். அவ்வாறெனில், இது போன்று நடந்த பெண் அதில் இருந்து மீண்டுவர எவ்வளவு மனத்திடம் வேண்டியிருக்கும்?! - சரவணன் மாணிக்கவாசகம்
Book Details
Book Title ஊழின் அடிமையாக: வேட்கை தணிக்கும் பெண்ணின் சுயசரிதை | Comfort Woman (oozhin-adimaiyaga)
Author மரியா ரோஸா ஹென்ஸன்
Translator எம்.ரிஷான் ஷெரீப் (M.Rishan Sherif)
ISBN 9788196405076
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Published On Jul 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Sex | பாலியல் - காமம், War | போர், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வலி நிறைந்த கணங்களுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் கவிதைகள் இவை. மெல்லிசை அழிந்த காலத்தைப் பற்றிப் பேசுகிறார் ரிஷான் ஷெரீப். சமகாலத்து ஈழக் கவிஞர்களில் தொடர்ந்து எழுதுபவரும் அதனாலேயே கவனத்தைக் கோருபவருமான ரிஷானின் 56 கவிதைகள்கொண்ட இந்தத் தொகுப்பு இன்றைய ஈழக் கவிதையின் திசை காட்டியும் கூட. ‘ஒவ்வ..
₹57 ₹60