Menu
Your Cart

தத்துவ தரிசனங்கள்

தத்துவ தரிசனங்கள்
-5 % Out Of Stock
தத்துவ தரிசனங்கள்
பத்மன் (ஆசிரியர்)
₹285
₹300
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்திய தத்துவ தரிசனங்களின் சுருக்கமான, அழுத்தமான அறிமுகம். கடவுளோ ஆன்மாவோ இல்லை என்று கூறும் நாத்திகமான சார்வாகம்; பொருள்களின் சேர்க்கைதான் உலகம் என்று கூறும் லோகாயதம்; ஆன்மா உண்டு ஆண்டவன் இல்லை என்று கூறும் சமணம்; ஆண்டவனைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் வாழ்வியலைப் போதிக்கும் பௌத்தம்... பிரபஞ்சத்தின் தோற்றத்தை ஆராய்ந்து ஆன்மாவை வலியுறுத்தி ஆண்டவனை மறுக்கும் சாங்கியம்; அணுக்களின் சேர்க்கைதான் உலகம் என்று கூறும் வைசேஷிகம்; காரண - காரிய வாதங்களை அலசி ஆராயும் நியாயம்; உடல்-மன கட்டுப்பாடுகள், பயிற்சிகள் மூலம் உண்மையை அறிய முயலும் யோகம்; வேள்விகள் உள்ளிட்ட கடமைகளைச் செய்வதை வலியுறுத்தும் மீமாம்சை... தத்துவ விசாரணையையும் கடவுளையும் வலியுறுத்தும் வேதாந்தம் அதன் உட்பிரிவுகளான அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், துவைதாத்வைதம், அபேதபேதவாதம்; இந்த வேதாந்தத்தில் இருந்து வேறுபட்டு சிவமே பμம் என்று கூறும் சித்தாந்த சைவம்; சித்தாந்த சைவத்தோடு முரண்பட்ட பாசுபதம், காளாமுகம், காபாலிகம்; மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டை முன்னிறுத்தித் தோன்றிய தாந்திரீகம்... வழிபடு கடவுளை வரித்துக்கொண்டு எழுந்த சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம், ஐந்திரம்; பிற்காலத்தில் தோன்றிய சீக்கியம், பிரம்மசமாஜம், ஆரிய சமாஜம், ராமகிருஷ்ண இயக்கம், வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம் உள்ளிட்ட பல்வேறு தத்துவங்கள் இந்தியாவில் பல்கிப் பெருகின, பெருகி வருகின்றன. இத்தகைய அனைத்து இந்திய தத்துவ தரிசனங்களையும் சுருக்கமாகவும் அழுத்தமாகவும் எளிய நடையில் தொகுத்துக் கூறும் முக்கியமான நூல். தினமணி.காமில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகளின் செம்மைப்படுத்தப்பட்ட வடிவம்.
Book Details
Book Title தத்துவ தரிசனங்கள் (Thaththuva Darisanangal)
Author பத்மன் (Padhman)
ISBN 9788184937077
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 352
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இவ்வுலகில் முருகக் கடவுளின் திருத்தலங்கள் எங்கெல்லாம் அமைந்திருக்கின்றன, அதன் சிறப்பு, விசேஷ காலங்களில் அந்தக் கோயில்களில் நடைபெறும் விழாக்கள், அந்தக் கோயில்களில் முருகனின் வரலாறு, அவனுடைய லீலைகள், அண்டை நாடுகளிலும் ஆலயங்களில் இருந்துகொண்டு எப்படி அவன் அருள்பாலிக்கிறான்; தமிழகத்தில் சீர்மிகுந்து காண..
₹238 ₹250