Menu
Your Cart

முஹம்மத் நபி(ஸல்)

முஹம்மத் நபி(ஸல்)
-5 %
முஹம்மத் நபி(ஸல்)
₹565
₹595
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

முஹம்மத் நபி(ஸல்)-வாழ்க்கை வரலாறு

அரசரிடமிருந்து ஒரே ஒருவர் தப்பிச் சென்று ரோம் ஆட்சியாளரிடம் உதவ கோரினார். கிறிஸ்தவராக இருந்த ரோம் தேசத்து ஆட்சியாளர் நடந்த சம்பவங்கள் யாவற்றையும் செவிமடுத்த பின்னர் "நாங்கள் யெமனில் இருந்து அதிக தொலைவில் இருக்கிறோம். வேண்டுமென்றால் நஜ்ஜாஸி மன்னரிடம் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்." என்று கூறி நஜ்ஜாஸி மன்னனுக்கு கடிதமொன்றை அனுப்பினார். நஜ்ஜாஸி மன்னரும் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றக் கூடியவராக இருந்தார்.

"ஆர்யாத்" என்ற ஒரு தளபதியின் தலைமையில் ஒரு படையை யெமன் நாட்டுக்கு நஜ்ஜாஸி மன்னன் அனுப்பிவைத்தார். தூ நவாஸை ஆர்யாத் போரிலே தோற்கடித்தான். தோல்வியுற்ற தூநவாஸ் செங்கடலுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.

யெமனின் ஒரு பகுதியை அபீஸீனியர்கள் ஆட்சி செய்தார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு யெமனை ஆர்யாத் ஆட்சி செய்தான். ஆர்யாதின் படைத்தளபதிகளில் ஒருவரான 'ஆப்ரஹா' என்பவன் ஆர்யாத்திற்கு எதிராக சதிப்புரட்சி ஒன்றை மேற்கொண்டதன் விளைவாக அபீஸீனியர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்தனர். இரண்டு குழுக்களிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

"நாமிருவரும் ஒருவரையொருவர் கொன்றுவிட்டால் இந்த ஊர் மக்கள் மீண்டும் யெமனைக் கைப்பற்றி விடுவர். அதனால் நாமிருவரும் நேருக்கு நேர் மோதி அதில் வெற்றி பெறுபவர் ஆட்சி செய்து கொள்ளலாம்." என ஆர்யாத் ஆப்ரஹாவிடம் கூறினான்.

ஆர்யாத் உயரமான மெல்லிய உடலமைப்பைக் கொண்டவன். அதே நேரம் ஆப்ரஹா குட்டையான பருமனான உடலமைப்பைக் கொண்டவன். நேருக்கு நேர் இருவருக்கும் நடை பெறுகின்ற மல்யுத்தத்திலே தான் தோற்பது போன்ற நிலைமை ஏற்பட்டால் ஆர்யாத்தைக் கொன்று விடுவதற்காக தனது வீரர்களில் சிலரை இரகசியமாக ஆப்ரஹா ஏற்பாடு செய்தான். அவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதியபோது ஆர்யாத் உயரத்தில் இருந்து அப்ரஹாவின் தலைமீது தாக்கி அவனது மூக்கையும் அறுத்துவிட்டான். இதனைக் கண்ட ஆப்ரஹாவின் வீரர்கள் பாய்ந்து ஆர்யாத்தைக் கொலை செய்துவிட்டனர். யெமன் முழுவதும் இப்போது ஆப்ரஹாவின் ஆட்சியின் கீழ் வந்தது. மக்கள் அனைவரும் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்ற வேண்டும் என்று ஆப்ரஹா விரும்பினான். அரபிகள் கஃபதுள்ளாவை மிகவும் நேசித்ததால் அதைப் போன்று கஃபதுல்லாவிற்கு நிகரான ஒன்றை யெமனில் நிர்மாணிக்கத் தீர்மானித்தான்.

"அல் குல்லைஸ்" என அழைக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான ஒரு அழகிய தேவாலயம் ஒன்றை ஆப்ரஹா யெமனிலே கட்டினான். கஃபதுல்லாவிற்கு போட்டியாகவே இந்தக் கட்டிடத்தை ஆப்ரஹா நிர்மாணித்தான். இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத ஒருவர் இந்தக் கட்டிடத்தின் புனிதத் தன்மையைக் கெடுப்பதற்காக தனது மலத்தை எடுத்து கட்டிடச் சுவர்களில் பூசிவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதனைப் பார்த்து ஆப்ரஹாவிற்கு கோபம் தலைக்கேறியது. கஃபதுல்லாவை அழித்துவிடுவதுதான் இதற்கான தீர்வு என்று ஆப்ரஹா தீர்மானித்தான். மாபெரும் யானைப்படையைத் திரட்டிக் கொண்டு மக்காவை நோக்கி வந்தான்.

வழியிலே ஒரு கோத்திரத்தின் தலைவரான "நுபைல்" என்பவர் ஆப்ரஹாவை தடுக்க முயற்சி செய்தார். ஆனால் ஆப்ரஹா தடையை முறியடித்து நுபைலையும் போர்க் கைதியாகக் கைப்பற்றினான்.

ஆப்ரஹா தாயிப் நகரத்தை வந்தடைந்ததும் அவனது நோக்கத்திற்கு தாயிப் மக்கள் ஆதரவு அளித்தனர். "அபூ ரகாதி" என்பவன் வழிகாட்டியாக ஆப்ரஹாவுடன் சென்றான். ஆப்ரஹாவின் படை தாயிப் நகரைத் தாண்டியதும் அபூ ரகாதி இறந்துவிட்டான்.

அபூ ரகாதி இறந்த இடத்தில் அவனது சிலை ஒன்றை உருவாக்கி அந்த சிலைக்கு கல்லால் எறிந்து வந்தனர். அவனது துரோகத்திற்காகவே அரபிகள் இதனைச் செய்தனர்.

ஆப்ரஹா மக்காவின் புறநகர்ப் பகுதியை வந்தடைந்தான். அந்தப் பிரதேசங்களில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த ஒட்டகங்களை ஆப்ரஹாவின் படையினர் கைப்பற்றி ஓட்டிச் சென்றனர். இவை நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பாட்டன் அப்துல் முத்தலிப்புடைய ஒட்டகங்களாகும். இதனைக் கேள்விப்பட்ட அப்துல் முத்தலிப் ஆப்ரஹாவை சந்திக்க வந்தார். ஆப்ரஹாவினால் கைது செய்யப்பட்ட நுபைல் என்பவர் அப்துல் முத்தலிபின் நெருங்கிய நண்பர். பயணத்தின் போது நுபைல் ஆப்ரஹாவின் படையில் இருந்த உனைஸ் என்பவரை நண்பனாக்கினார். இந்த உனைஸ் என்பவரே யானைப்படைக்கு பொறுப்பாக இருந்தார். அப்துல் முத்தலிப் ஆப்ரஹாவை சந்திக்க வந்திருக்கிறார் என்பதை நுபைல் உனைஸிடம் தெரிவிக்க, அவர் ஆப்ரஹாவை அப்துல் முத்தலிப் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

பொதுவாகவே அப்துல் முத்தலிப்பை முதலாம் முறை ஒருவர் பார்க்கின்ற போதே அவர் மீது அதீத மரியாதை ஏற்படும் அளவுக்கு கம்பீரமான, வசீகரமான தோற்ற அமைப்பைக் கொண்டவர் என அப்துல் முத்தலிப் வர்ணிக்கப்படுகிறார். அப்துல் முத்தலிப் வருவதைக் கண்ட ஆப்ரஹாவிற்கு அவர் மீது ஒருவிதமான மரியாதை ஏற்பட்டது. வழமையாக ஆப்ரஹாவை சந்திக்க வருபவர்கள் அவனது அரியாசனத்தின் கீழே அமர்ந்துதான் அவனுடன் உரையாட வேண்டும். ஆனால் அப்துல் முத்தலிப்பை அவ்வாறு உட்கார வைக்க ஆப்ரஹாவின் மனம் இடம் கொடுக்கவில்லை. அதே நேரம் தனது அரியாசனத்திலும் அமர வைக்க முடியாது. அதனால் ஆப்ரஹா அரியாசனத்தில் இருந்து இறங்கி வந்து தரையிலே அப்துல் முத்தலிப்புடன் அமர்ந்து கொண்டான். "அப்துல் முத்தலிப் என்ன பேச வந்திருக்கிறார்?" எனக் கேட்குமாறு தனது மொழிபெயர்ப்பாளரிடம் கூறினான்.

அப்துல் முத்தலிப் சுத்தி வளைக்காமல் "உனது படை வீரர்கள் எனக்கு சொந்தமான 200 ஒட்டகங்களை கைப்பற்றி விட்டனர். அதனை எனக்குத் திருப்பிக் கொடுத்துவிடு" என்று கூறினார். அதனைக் கேட்டது ஆப்ரஹாவிற்கு பலத்த ஏமாற்றமாய்ப் போனது. "உன்னைக் கண்டதும் உன்மீது எனக்கு அதிக மரியாதை இருந்தது. ஆனால் அவை அனைத்தையும் இப்போது நீ இழந்துவிட்டாய். உனது மூதாதையர் கட்டிக்காத்த, உங்கள் வாழ்க்கையின் கேந்திர நிலையமான கஃபதுல்லாவை உடைக்க நான் வந்திருக்கின்றேன். ஆனால் நீயோ ஒட்டகங்களைப் பற்றி விசாரிக்க வந்திருக்கிறாய்" என்று கூறினான். அப்துல் முத்தலிப்பின் ஒட்டகங்களை திருப்பிக் கொடுக்குமாறு கட்டளையிட்டான். இதனைக் கேட்ட அப்துல் முத்தலிப் "அந்த ஒட்டகங்கள் என்னுடையவை, அதனால் தான் அதன் பொறுப்பு என்மீதுள்ளது. ஆனால் கஃபதுல்லாவோ அள்ளாஹ்வினுடையது. அதனை அள்ளாஹ் பாதுகாப்பான்." என்று கூறினார். ஒட்டகங்களுடன் மக்கா திரும்பிய அப்துல் முத்தலிப் "ஆப்ரஹாவுடன் யாரும் போர் செய்ய வேண்டாம், அவனை யாரும் எதிர்க்கவும் வேண்டாம்" என தெளிவான கட்டளைகளைப் பிறப்பித்தார். மக்கள் அனைவரும் மலைகளுக்குச் சென்று என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டு நின்றனர். அப்துல் முத்தலிப் கஃபதுல்லாவின் துணியை கையில் பிடித்து "இறைவா! உனது வீட்டை நீயே பாதுகாத்துக் கொள்" என்று பிராத்தித்துவிட்டு இறுதி ஆளாக மலையில் ஏறினார்.

கஃபதுல்லாவை நோக்கி தாக்கும் படி யானைப்படையிடம் ஆப்ரஹா கட்டளையிட்டான். யானைகள் நகர மறுத்தன. வேறு திசையில் நகர்த்தினால் யானைகள் வேகமாக நகர்ந்தன, ஆனால் கஃபதுல்லாவின் திசையை நோக்கி அனுப்பியதும் அந்த யானைகள் நகர மறுத்து உட்கார்ந்து விட்டன. இது அள்ளாஹ்வின் அற்புதமே! "இது அள்ளாஹ்வின் வீடு, இதனைத் தாக்க வேண்டாம்." என்று யானைகளின் காதுகளில் கூறிவிட்டு உனைஸ் தப்பிச் சென்றுவிட்டதாலேயே யானைகள் நகர மறுத்தன என்றும் சொல்லப்படுகிறது. அள்ளாஹு அஃலம்.

கஃபதுல்லாவை நோக்கிச் செல்ல யானைகள் மறுத்தன. யானைகளை எவ்வளவு துன்புறுத்தியும் அவை கஃபதுல்லாவின் பக்கம் நகர மறுத்தன. யானைகளை நம்பிப் பயனில்லை என்று தெரிந்ததும் அவர்கள் யானைகளை விட்டுவிட்டு முன்னேறிச் செல்லத் தயாராகினார்கள். அப்போதுதான் அள்ளாஹ் தனது படையை அவர்களுக்கு எதிராக அனுப்பினான். நீர், காற்று, பறவை, மிருகம், கடல் என எதுவேண்டுமானாலும் அள்ளாஹ்வின் படையாக இருக்கலாம். பறவைகளின் படை ஒன்றை ஆப்ரஹாவின் யானைப்படையை நோக்கி அள்ளாஹ் அனுப்பினான். அவை தங்களது அலகுகளில் சுடப்பட்ட கற்களைக் கொண்டு வந்து போட்டு ஆப்ரஹாவின் படையை முற்றாக அழித்துவிட்டன.

ஸுறா அல்-பீல் இலே இந்த சம்பவம் பதிவு செய்யப்படுகின்றது. நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த சம்பவம் நடைபெற்ற ஆண்டிலேயே பிறந்தார்கள்.
Book Details
Book Title முஹம்மத் நபி(ஸல்) (Mohamed nabi(shall)-life history)
Author முஹம்மத் ஹுஸைன் ஹைகல் (Muhammadh Husain Haikal)
Translator குளச்சல் மு.யூசுப் (Kulachal.M.Yoosuf)
ISBN 9789352440696
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 567
Year 2015
Edition 3
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை; சாகசத் தன்மை கொண்டவை. போலீசில் பிடிபட்டதுமே உண்மைகளை ஒப்புக்கொண்டுவிடுகிற இவர், தன் மீதான வழக்குகளுக்கு வழக்கறிஞர்களை..
₹656 ₹690
வேடிக்கைக் கதையாகச் சொல்லப்பட்ட குடும்பப் புராணம் 'பாத்துமா வின் ஆடு'. ஆனால் வைக்கம் முகம்மது பஷீர் எழுதியவற்றில் பல அடுக்குகளில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய நாவலும் இதுதான். அன்பின் பெயரால் மையப்பாத்திரத்தைச் சுரண்டும் உறவுகளின் வலை, பெண்களின் உலகத்துக்குள் நிலவும் பூசல்களின் சிக்கல், மனிதர்களுக்கு..
₹143 ₹150
புராதனமான பள்ளி வாசலையும் பள்ளி வளாகத்தையும் பற்றிய கதை. வளாகம் நிறைந்து கிடக்கும் கல்லறைகளையும் கதைகளைக் கற்பிதம் செய்ய இயலும் கல்லறைவாசிகளையும் பற்றிய கதை. உயிர்த்தெழுந்து மறுபடியும் வாழ்ந்து கொண்டிருக்கும் கல்லறைவாசிகள். மீஸான் கற்களாக மாறிய அழியாத மனிதர்கள். மறைக்கப்பட்டவைகளையும் அற்புத ஒளி பக..
₹356 ₹375
பஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட நாவல் ‘பால்யகால சகி’. இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான். தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உண..
₹119 ₹125