இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவும் அவை வெளியானபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பெருங்கால்வாய் வெட்டிய பெருமகன், தமிழரின் பெயர்வைக்கும் பழக்கம், காவிரியில் புத்தணைகள் கட்ட முடியாத காரணம், வரலாற்றின் உறைவிடங்களை நோக்கிய பயணங்கள், நீந்திப் பழகிய நீர்நிலை போன்ற பற்பல பொருள்களில் மனத்தோடு கொஞ்சும் மொழ..
₹114 ₹120
பழமொழிகள் நெடுவாழ்க்கை வாழ்ந்த குமுகாயப் பேரறிவின் தொகுப்புத் தொடர்கள். சுருங்கச் சொல்வதும் சுருக்கென மனத்தில் தைக்குமாறு விளங்க வைத்தலும் அவற்றின் சிறப்பு. பழமொழித்தொடர்களால் வாழ்க்கையைக் கற்பித்தவர்கள் தமிழர்கள். தமிழறிஞர்களும் இயன்ற இடங்களிலெல்லாம் இடையறாது அத்தொடர்களை எடுத்தாண்டனர். இந்நூலில் பழ..
₹76 ₹80
நற்றமிழில் நற்பொருள்களில் எழுதப்பட்ட கருத்து வளமுடைய கட்டுரைகளின் தொகுதி இந்நூல். தொல்லியலில் தொடங்கி மொழிநலத்தில் அடிவைத்து இலக்கியம், ஊரழகு, சுற்றுலா, திரைப்படம் எனப் பலதுறைகளில் மூழ்கியெழுந்த படைப்புகள். படிப்பின் சுவை நல்கி அறிவில் விளக்கேற்றும் அழகிய தமிழ்நடையில் எழுதப்பட்ட பயன்மிகு கட்டுரைகள் ..
₹124 ₹130
காதற்பொருளில் மொழிச் செப்பமும் கற்பனை நுட்பமும் கூடியமைந்த கவிதைகள். அன்பின் நெடுவழியே செல்லும் மனத்தின் செம்பழுப்பினை வரைந்து காட்டத் துடிக்கும் வளச்சொற்களாலான வரிகள். காதலும் மொழியும் கலந்து பிணைந்து பிறப்பிக்கும் எழிலார் சொற்றொடர்கள். கவிஞரின் பதினாறாவது கவிதைத் தொகுப்பு இந்நூல்...
₹114 ₹120
இலக்கிய வகைமையில் மிகுதியாய் எழுதப்பட்டவை கவிதைகள். யாப்பு நீங்கிய வடிவம் பரவலானதும் அவை எழுதிக் குவிப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியாம் முப்பது ஆண்டுகளில் அவற்றின் பெருக்கம் தொடங்கியது. வானம்பாடிகளிடம் புதுக்கவிதையாய் இருந்தது தூய இலக்கியத்தாரிடம் நவீன கவிதை ஆயிற்று. ஆனால் பாருங்கள், அன்று..
₹171 ₹180
மொழியை வளர்ப்பதும் கட்டிக் காப்பதும் நமக்கு உயிரோம்பலை நிகர்த்த கடமைகள். அவ்வழித்தடத்தில் செல்லும்போது எதிர்ப்படும் கல்லும் முள்ளும் கற்பாறைகளும் கடிவிலங்குகளும் எவரையும் ஒரு நொடியில் வீழ்த்திவிடுபவை. அத்தகைய எதிர்ப்புகளுக்கும் எள்ளல்களுக்கும் எதிர்வினையாற்றியபடி தடம்பிறழாது நடந்த நடைக்குறிப்புகள் இ..
₹124 ₹130