- Edition: 1
- Year: 2014
- Page: 168
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மலைகள்
மலேசியன் ஏர்லைன் 370
பெரும்பாலான ஈழத்துப் புனைகதைகள் பேரினவாத ஆக்கிரமிப்பு, அரச இயந்திரத்தின் இராணுவ அடக்குமுறைகள், தமிழர் தேசத்தின் விடுதலைக்கான ஆயுதக்குழுக்களின் ஆராதனை போன்ற பொதுமைத்தன்மையான அடையாளத்தில் இருப்பவை. அவற்றிலிருந்து வேறுபட்டு, வாசகனை பிரத்தியேக இன, மத, தேச, குடும்ப உறவுகள் மற்றும் நானாவித உணர்வுக்குமிழ்கள் உடனான வாசிப்பனுபவத்துக்கு இட்டுச் செல்கின்ற வித்தியாசமான படைப்புக்கள் இவை. பல்துறை அறிவுத்துறையுடன், கலையழகைக் கொண்டுவரும் நடேசனின் உரைநடை மொழிலாவகம், வாழ்க்கையைப் போலவே இலக்கியமும் பன்முகத்தன்மைகொண்டது என்பதை ஒவ்வொரு படைப்பினூடாகவும் பகிரும் விதம் லயிப்பு.
ஏற்கனவே, வண்ணாத்திக்குளம் (தமிழ் ஆங்கிலம்) நாவல் உன்னையே மையல்கொண்டு (தமிழ் ஆங்கிலம்) நாவல் அசோகனின் வைத்தியசாலை நாவல் மற்றும் வாழும் சுவடுகள் (2 தொகுதிகள்) அனுபவப்பதிவுகள் என ஐந்து நூல்கள் மூலம் இலக்கிய வாசகர்களுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ள நடேசனின் ஆறாவது நூலாக வரும் இந்த நூல் அவருடைய முதலாவது சிறுகதைத் தொகுப்பு.
தெளிவத்தை யோசப்
Book Details | |
Book Title | மலேசியன் ஏர்லைன் 370 (Malasiyan Airline 370) |
Author | நடேசன் (Nadesan) |
Publisher | மலைகள் (Malaigal) |
Pages | 168 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |