Menu
Your Cart

மனம்விட்டுப் பேசாதீங்க!

மனம்விட்டுப் பேசாதீங்க!
-5 %
மனம்விட்டுப் பேசாதீங்க!
ஜி.எஸ்.எஸ். (ஆசிரியர்)
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மனம் குறித்த பல்வேறு சொல்லாடல்களை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கிறோம். மனம் ஒரு குரங்கு; பெத்தமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு; நான் மனசு வச்சா எதை வேண்டுமானாலும் முடித்துக் காட்டுவேன்; மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பவன் நான்... மனம்விட்டுப் பேசினால் எந்தப் பிரச்னையையும் தீர்க்கலாம் என்பது நம்பிக்கை. ஆனால், மனம்விட்டுப் பேசினால் அவ்வளவும் அதோகதிதான் என்கிறார் இந்த நூலின் ஆசிரியர். எதையும் பேசாதீர்கள் என்கிறது இந்த புத்தகம். ஏன் பேசக் கூடாது? பேசுவது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? ஆம்... குற்றம்தான் என்கிறார் நூலாசிரியர். எப்படி? ‘ஒரு விவாதத்தில் நீ வெற்றி பெறலாம். ஆனால் ஒரு நண்பனை இழந்துவிடுவாய்’ என்பார்கள். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். உங்கள் வாதத் திறமையால் எதிராளியின் வாயை அடைத்து விடுகிறீர்கள். அப்போது அவர் மனதில் என்ன தோன்றும்? “இப்போதைக்கு நீ ஜெயித்துவிட்டாய். ஆனால் எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும் அப்போது உன்னை நான் மட்டம் தட்டுவேன்” என்று கருவக்கூடும். அதுவும் சிலர் எதிரில் நீங்கள் விவாதத்தில் ஜெயித்திருந்தால் எதிராளியின் இந்த உணர்வு கொஞ்சம் அதிகமாகவே இருக்கலாம். அப்படி ஓர் எதிர்ப்பு உணர்ச்சி தோன்றாவிட்டால்கூட தான் தோற்றுவிட்டோமே என்று அவர் மனம் புண்படக்கூடும். உங்களுடன் கொண்ட நட்பை அவர் குறைத்துக்கொள்வார். ஆக, உங்கள் வெற்றி என்பது தற்காலிகமானதுதான். முக்கியமான வேறு ஒன்றை நீங்கள் இழந்துவிடுகிறீர்கள். இதனால் தான் மனம்விட்டுப் பேசக் கூடாது என்கிறார் நூலாசிரியர். இந்த புத்தகத்தைப் படியுங்கள்... சொல்லாத சொல்தான் வெல்லும் சொல் என்பதை நீங்கள் சொல்வீர்கள்!
Book Details
Book Title மனம்விட்டுப் பேசாதீங்க! (Manamvittu Pesatheenga)
Author ஜி.எஸ்.எஸ். (G.S.S)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

எதற்கும் தொடக்கம் என்று ஒன்று உண்டு. அந்த வகையில் சிறப்பான தொடக்கங்கள் பெற்ற பல கண்டுபிடிப்புகள், முதன்முதலாக நடந்தேறிய சம்பவங்கள் ஆகியவை வரலாற்றில் முத்திரை பதித்துள்ளன. முதல் கண்டுபிடிப்புகளிலும், முதல் சம்பவங்களிலும் பல்வேறு சுவாரசியங்கள் பொதிந்திருக்கும். மைக்ரோ ஓவன் கண்டுபிடிக்கப்பட்டதில் பெரும..
₹109 ₹115
ஆப்கானிஸ்தான் அழிவிலிருந்து வாழ்வுக்கு..
₹57 ₹60