- Edition: 1
- Year: 2006
- Page: 320
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மங்கை பதிப்பகம்
மிதிபடும் மானுடம் மீட்பின் மனவலி
மனிதம் எல்லாக் காலங்களிலும் ஆதிக்க சக்திகளால் மிதிபட்டே வந்திருக்கிறது. தற்போதும் மிதிபட்டுக்கொண்டே வருகிறது. அதே வேளை அதிலிருந்து மீள்வதற்கான போராட்டமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இதற்கு எப்போது முடிவு. புவிக்கோளெங்கும் நிலவும் அனைத்து அதிகாரங்களும் தகர்ந்து உலகம் முழுவதும் ஒரே சமூகமாக வாழ்வது எப்போது என்பது நெடுங்கனவாயிருந்தாலும் அந்தந்தப் பகுதியிலும் பாதிக்கப்பட்ட மக்கள் அவரவர் சக்திக்குத் தங்கள் மீதான ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்காகக் குரல் கொடுக்கிற மனிதர்களும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்தத் தெம்பிலும் இந்த நம்பிக்கையிலுமே வாழ்க்கை இயங்கிக்கொண்டிருக்கிறது. எதிர்நீச்சல் போட்டு மல்லாடுகிறது. இப்படி இயங்கும் வாழ்க்கைக்கு இதுபோன்ற நூல்கள், இதில் சொல்லப்படும் செய்திகள், சந்திக்கும் மனிதர்கள் ஒரு தூண்டுகோல், ஒரு நம்பிக்கை, உந்துதலைத் தருமானால் அதுவே இதுபோன்ற நூல்களின் பயனும் அந்த வகையில் இந்த நூலும் வாழ்க்கைப் போராட்டத்திற்கு ஓரளவேனும் துணைபுரியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
-முன்னுரையிலிருந்து…
Book Details | |
Book Title | மிதிபடும் மானுடம் மீட்பின் மனவலி (Mithipadum Maanudum Meetpin Manavali) |
Author | இராசேந்திர சோழன் (Rajendira Chozhan) |
Publisher | மங்கை பதிப்பகம் (Mangai Pathipagam) |
Pages | 320 |
Year | 2006 |
Edition | 1 |
Format | Paper Back |