- Edition: 1
- Year: 2012
- Page: 192
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மங்கை பதிப்பகம்
தமிழ் இலக்கியங்களில் சிவன்
‘தமிழ் இலக்கியங்களில் சிவன்’ என்னும் இந்நூலாசிரியர் எங்கள் அன்பு அன்னை முனைவர் ச.ரேணுகா ஆவார்.
இவர் இராணிமேரி கல்லூரியில் தமிழ் இளங்கலைப் பட்டம் பயிலும்போது மொழிப் பாடமாகச் சமஸ்கிருதம் பயின்றுள்ளார். பன்மொழிப் புலமை பெற வேண்டும் என்னும் ஆர்வ முயற்சியால் இந்தி மொழியில் பிரவீன் பட்டயமும் பெற்று உள்ளார்; ஆங்கிலத்திலும் நல்ல தேர்ச்சி பெற்றுள்ளார்.
சென்னை பாரதி மகளிர்ம் கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் இவர், பெண் கல்வி முன்னேற்றத்தில் தனிக் கவனம் காட்டிவரும் ஈடுபாட்டாளர் ஆவார்.
‘சங்க இலக்கியங்கள் காட்டும் மனித உறவுகள்’ என்னும் தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனவைர் பட்டம் பெற்றுள்ளார்.
பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு (UGC) 2 அளித்த நிதி உதவியால், ‘தமிழ், இந்தி மொழிகளில் உள்ள பழமொழிகள் - ஓர் ஒப்பாய்வு’ என்னும் தலைப்பில் செயல்திட்ட ஆய்வு (Project research) நிகழ்த்தி உள்ளார்.
இவர் மாநில, தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்குகளில் எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளை அளித்துள்ளார். மேலும் அடிச்சுவடு என்னும் சிறுகதை நூலும், ‘இலக்கிய வாழ்வியல்’ என்ன்னும் கட்டுரை நூலும் படைத்துள்ளார்.
இத்தகைய மாட்சிமை உடைய இவர், எங்களுக்குப் பேரன்பும் நல் அரவணைப்பும் அள்ளித்தரும் உன்னதம் நிறைந்த இதத்தாயாய் விளங்குவது எம் பிறவிப் பெரும்பேறு என்றெண்ணி மகிழ்ச்சி கொள்கிறோம்.
கி.நப்பின்னை, பி.டெக்.,
கி.தாமரை, பி.டெக்.,
Book Details | |
Book Title | தமிழ் இலக்கியங்களில் சிவன் (Tamil Ilakiyangalil Sivan) |
Author | முனைவர் ச.இரேணுகா (Munaivar Sa.Irenukaa) |
Publisher | மங்கை பதிப்பகம் (Mangai Pathipagam) |
Pages | 192 |
Year | 2012 |
Edition | 1 |
Format | Paper Back |