Menu
Your Cart

மரணத்துக்குப் பின்...

மரணத்துக்குப் பின்...
-5 %
மரணத்துக்குப் பின்...
குருஜி வாசுதேவ் (ஆசிரியர்)
₹559
₹588
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மனித குலத்தைக் காலம் காலமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மிகக் கொடுமையான பகைவன் யார்? இந்தக் கேள்விக்கு மிக எளிமையானதும் பொருத்தமானதுமான ஒரே பதில்தான் உண்டு. அது, மரணம். கடவுளின் அவதாரங்களான ராமரும் கிருஷ்ணரும் இறுதியில் உலக வாழ்க்கையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்களே. மதக் கோட்பாடுகளை உலகுக்கு அளித்த ஆதிசங்கரரும் புத்தரும் மகாவீரரும் ஒருநாள் உலகைவிட்டு மறைந்துதான் போனார்கள். அற்புதங்கள் பலவற்றைச் செய்து காட்டிய ஆழ்வார்கள், நாயன்மார்களுக்கும் இறப்பு என்ற ஒன்று இருக்கத்தான் செய்தது. ஒருவனுக்கு மரணம் என்பது எப்படி நேர்கிறது? அவனது உயிர் எந்த வழியாக அவன் உடலிலிருந்து பிரிந்து செல்கிறது? இது பற்றிய உண்மை தெரிந்தால்போதும். மரணம் பற்றி அக்குவேறு, ஆணிவேறாக நம்மால் அலசி ஆராய்ந்து நம் கேள்விகளுக்குப் பதிலளிக்கக்கூடிய பல உண்மைகளை நம்மால் சுலபமாகக் கண்டறிந்து விடமுடியம். அதன் மூலம் மரணத்தைத் தடுக்கும் வழிமுறைகளையும் நாம் கண்டுபிடித்துவிடலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. ஆயினும், மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் பல நோயாளிகளிடம் தீவிரமான பல ஆய்வுகளை மேற்கொண்டும்கூட எப்படி ஒரு மனிதனுக்கு மரணம் நேர்கிறது என்பது பற்றி யாராலும் கண்டறிய முடியவில்லை. மரணத்துக்கு முன்னர் மனிதனுக்கு என்ன நிகழ்கிறது? மரணத்துக்குப்பின் மனிதனின் நிலை என்ன? இவை குறித்தெல்லாம் விஞ்ஞானமும் உலக மதங்களும் என்னதான் சொல்கின்றன? இதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகள் என்ன?, ஆன்மீக நூல்கள் இதுபற்றி என்ன சொல்கின்றன என்பதைப் பற்றி எளிதில் புரியும் வகையில் விவரிக்கிறது இந்தப் புத்தகம்!
Book Details
Book Title மரணத்துக்குப் பின்... (Maranaththukku Pin)
Author குருஜி வாசுதேவ் (Kuruji Vaasudhev)
ISBN 9789383067572
Publisher சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixthsense Publications)
Pages 360
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஜென் தத்துவக் கதைகள்இதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் புரியாத தன்மையே அதற்குள்ள பெருமை என்ற ஒரு வீணான மாயையும் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. ஒரு புத்தகத்திற்குத் தான..
₹253 ₹266
மாறுபட்டு சிந்தியுங்கள்ஆறு கீழ் இருந்து தண்ணீரைப் பெறுவதில்லை. தன்னிடம் உள்ள நீரைத்தான் பிறருக்கு அளிக்கிறது. இந்த ஆற்றிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அநேகம். எல்லாவற்றையும் மாறுபட்டு சிந்திக்கின்ற முறைகளைத்தான் உங்களுக்குக் கற்றுத் தருகிறது இந்தச் சிறிய புத்தகம்.ஆறுகள் மலையிலிருந்து..
₹168 ₹177
மனம் அற்ற மனம்மன அமைதியை அடைவதற்கான வழிகளைக் குட்டிக் குட்டிக் கதைகளுடன் விஞ்ஞான பூர்வமான உதாரணங்களுடன் விளக்குகிறது இந்தப் புத்தகம்.மன அமைதிக்காக மகான்களை நாடிச் சென்று சரணடையும் மக்கள் அவர்கள் போலிகள் என்று அறியும்போது இருந்த கொஞ்ச நஞ்ச அமைதியையும் இழந்து விடுவதுதான் இங்கு வாடிக்கையாக இருக்கிறது.ஆ..
₹253 ₹266
மூச்சடக்கி மூழ்குபவர்கள் மட்டும்தான் இத்தகைய நல் முத்துக்களை அள்ளிக் கொண்டு வரமுடியும். கடலில் இறங்கித் தேடுபவர்கள்தான் அதை அடைய முடியும். தேடுங்கள், கிடைக்கும் என்பது கூட ஒரு வகையிலான சாகாவரம் பெற்ற சூஃபி மொழிதான். ஒவ்வொருவருக்குள்ளும் சூஃபி தன்மை உண்டு என்கிறது சூஃபியிஸம். எனினும் சிலரே அதனை வெளிக..
₹316 ₹333