-5 %
மரப்பசு
தி.ஜானகிராமன் / T.Janakiraman (ஆசிரியர்)
₹304
₹320
- Edition: 1
- Year: 2016
- ISBN: 9789352440092
- Page: 256
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மரப்பசு எழுபதுகளின் தொடக்கத்தில் கணையாழி இதழில் வெளிவந்து 1975இல் நூல் வடிவம் பெற்றது. அன்று முதல் இன்று வரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் வருகிறது - ஆதரவாகவும் எதிராகவும்.
தி. ஜானகராமன் நாவல்களில் மிக நவீனமான படைப்பு மரப்பசு;. அவரது பிற நாவல்கள் கடந்தகாலத்தின் மறு உருவாக்கங்கள். ஆனால் நிகழ்காலத்தை நேர்முகமாக எதிரொளித்த படைப்பு மரப்பசு;. பிற நாவல்கள் வாழ்வனுபவத்தின் மீதான படைப்புகள். அவற்றில் கருத்துக்கள் பின்புலமாகவே அமைந்தவை. மரப்பசு கருத்தை முன்னிறுத்தி வாழ்வை பாதித்த படைப்பு. இதில் அனுபவங்கள் கருத்துக்களை வலுப்படுத்துவதற்கான காரணிகளாகவே உருப்பெற்றிருப்பவை. உலகம் முழுவதும் பெண்ணியக் கருத்துகள் அலையடித்துக்கொண்டிருந்த தருணத்தில் அவற்றை தமிழில் விவாதித்த முதல் ஆக்கம் ;மரப்பசு
பூமியிலிருக்கும் சகல உயிர்களையும் அன்பின் கரங்களால் தழுவ விரும்பும் அம்மணி நவீன தமிழ் இலக்கியத்தில் மறக்க முடியாத பாத்திரங்களில் ஒன்று. அம்மணி மழைத் துளிபோல புதிதானவள். அதே சமயம் நதியைப் போல பழமையானவள். காற்றைப் போல் சுதந்திரமானவள். அதே சமயம் சிறகுகளின் பாதுகாப்பில் ஒடுங்க விரும்பியவள். உறவுகளைத் தேடி அலைந்தவள். அதே சமயம் தனிமையானவள். நாவலில் தன்னைப் பற்றி அம்மணி கூறும் சொற்களை மாற்றிச் சொன்னால் ;மரப்பசுவாக இருந்தாலும் உயிருள்ள பசுவாக; இருக்கும் தனித்துவம் கொண்டவள்.
Book Details | |
Book Title | மரப்பசு (Marappasu) |
Author | தி.ஜானகிராமன் / T.Janakiraman |
ISBN | 9789352440092 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 256 |
Published On | Jan 2016 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Classics | கிளாசிக்ஸ் |