Menu
Your Cart

சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு

சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு
-5 % Out Of Stock
சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு
தே.வீரராகவன் (ஆசிரியர்), சு.சீ.கண்ணன் (தமிழில்)
₹143
₹150
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சென்னை நகரத்தில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியோடு தொழிலாளர் வர்க்கம் உருவானதையும் தொழிற் சங்கங்கள் தோன்றுமுன்னர் நடந்த போராட்டங்களையும் விரிவாக முன்வைத்த வீரராகவனின் ஆய்வு, முதல் உலகப் போர் முடிந்த காலத்தில் தொழிற் சங்கங்கள் தோன்றியதையும் காட்டுகிறது. இக்கால கட்டத்தில் தேசிய இயக்கத்தோடு தொழிற்சங்கங்கள் கொண்ட ஊடாட்டத்தையும் பகுத்தாய்ந்தார் வீரராகவன். வீறார்ந்த போராட்டங்கள் நடந்தபின் ஒரு பத்தாண்டு கால இடைவெளியும் விழுகிறது. உலகப் பொருளாதாரப் பெருமந்தத்தைத் தொடர்ந்து தொழிலாளர் போராட்டங்கள் மீண்டும் தலையெடுக்கின்றன. இடதுசாரி சக்திகளும் தொழிற்சங்கங்களில் தலைமையேற்கத் தொடங்குகின்றன. பெருநம்பிக்கையைத் தொடக்கத்தில் கொடுத்த முதல் காங்கிரஸ் அமைச்சரவையின் தொழிலாளர் விரோத நிலைப்பாடுகள் ஏமாற்றம் தந்து, இரண்டாம் உலகப் போர் வெடிக்கும் தருணத்தில் வீரராகவனின் நூல் முடிகிறது. - ஆ. இரா. வேங்கடாசலபதி (தே. வீரராகவன் இறந்தபோது எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரையில் இருந்து)
Book Details
Book Title சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு (Chennai Perunagara Thozhirsanga Varalaaru)
Author தே.வீரராகவன் (T.Veeraraghavan)
Translator சு.சீ.கண்ணன் (Su.See.Kannan)
Publisher அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam)
Pages 384
Year 2003
Category Translation | மொழிபெயர்ப்பு, Marxism | மார்க்சியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

‘குலக்கல்வித் திட்டம்' என்று திராவிட இயக்கம் விமர்சித்த ராஜாஜியின் கல்வித் திட்டம் பற்றிய விரிவான முதல் நூல் இது. கிராமப்புறத் தொடக்கப் பள்ளி மாணவர்கள் பாதி நாளைப் பள்ளியிலும் எஞ்சிய அரை நாளைத் தமது குடும்பத் தொழிலைக் கற்றுக்கொள்வதிலும் செலவிட வேண்டும் என்பதே இத்திட்டம். இத்திட்டம் எவ்வாறு உருவானது,..
₹209 ₹220