-5 %
Available
கார்ல் மார்க்ஸ்: வாழ்வும் பணியும்
தா.பாண்டியன் (ஆசிரியர்)
₹133
₹140
- Year: 2017
- Page: 140
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கார்ல் மார்க்ஸின் 200 ஆவது பிறந்த நாள் வரப்போவதையொட்டி, அவரின் வாழ்க்கையையும், உலகிற்கு அவரின் பங்களிப்பையும் எடுத்துக் கூறும் நோக்கத்தோடு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கம்யூனிச சித்தாந்தம் ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரவியிருக்கும் இந்நாளில், அதனை உருவாக்கிய காரல்மார்க்ஸ் அந்தச் சிந்தனையை எவ்வாறு பெற்றார்? அதற்கான காரணங்கள் எவை? என்பதை இந்நூல் விளக்குகிறது. கார்ல்மார்க்ஸ் அவருடைய இளமைப் பருவத்திலேயே பைபிளின் ஆதியாகமத்தில் கேள்விகள் கேட்கத் தொடங்கியது, மார்க்ஸஸுக்கு மூத்த சிந்தனையாளர்களான சைமன், ச ராபர்ட் ஓவன் ஆகியோரின் சிந்தனைகளை விமர்சனத்தோடு பார்த்தது, ஹெகல் என்பவருடைய சிந்தனைகளின் தவறுகளைக் களைந்து புதிய அறிவியல்பூர்வமான சிந்தனைகளை உருவாக்கிக் கொண்டது, அவருடைய நண்பர் ஏங்கெல்ஸுடன் இணைந்து செயலாற்றியது, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத காலத்திலேயே இந்தியாவைப் பற்றி - அதிலும் குறிப்பாக - ஆசிய உற்பத்திமுறை பற்றி- ஆங்கிலேயர் போட்ட ரயில் பாதைகளால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி எழுதியது, மூலதனம் நூல் எழுத அவர் செய்த முயற்சிகள், மார்க்ஸின் துணைவியார் ஜென்னி வறுமையின்போதும் காரல்மார்க்ஸின் உற்ற துணையாக இருந்தது, முதலாளியப் பொருளுற்பத்திமுறை, தொழிலாளர்களின் உழைப்பில் இருந்து கிடைக்கும் உபரி மதிப்பு லாபமாக மாறி, மீண்டும் மூலதனமாவது, பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவது, அதற்கான காரணங்கள், முதலாளி வர்க்கம் தனது சவக்குழியைத் தானே தோண்டிக் கொள்ளும் என்று மார்க்ஸ் கூறியது என மார்க்ஸின் வாழ்க்கை, சிந்தனை, செயல்கள் அனைத்தையும் மிக எளிமையாக இந்நூல் விவரிக்கிறது.
Book Details | |
Book Title | கார்ல் மார்க்ஸ்: வாழ்வும் பணியும் (Karl Marx Vaazhvum Paniyum) |
Author | தா.பாண்டியன் (Thaa.Paantiyan) |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 140 |
Year | 2017 |