Menu
Your Cart

தொடக்கக் காலக் கிளர்ச்சியாளர்கள் (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)

தொடக்கக் காலக் கிளர்ச்சியாளர்கள் (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
-5 %
தொடக்கக் காலக் கிளர்ச்சியாளர்கள் (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
எரிக் ஹோப்ஸ்பாம் (ஆசிரியர்), ரகு அந்தோணி (தமிழில்)
₹309
₹325
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று ஆய்வுக் குழுவின் (CPHG)உறுப்பினர்களில் ஒருவராக எரிக் ஹாப்ஸ்பாம் கட்சிப்பணி ஆற்றினார். தொழிலாளர் வரலாற்று ஆய்வுக் கழகம் (Society for the Study of Labour History) என்ற அமைப்பையும் உருவாக்கி அதன் வழியாக அவர் செயல்பட்டார். வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் பல புதிய சிக்கலான வட்டாரங்களில் அவர் பயணம் செய்தார். அப்படிப்பட்ட வட்டாரங்களில் தொடக்கக் கால கிளர்ச்சியாளர்கள் என்ற இந்த நூல் குறித்து நிற்கும் பகுதியும் ஒன்று. பிரெஞ்சு வரலாற்று ஆசிரியர்களான Annales School of History என்ற அணியின் செல்வாக்கு இவரிடம் உண்டு என்று இவரை மதிப்பிடுவார்கள். வரலாறு என்பது வெறுமனே பொருளாதாரமோ அரசியலோ மட்டும் அல்ல அது மனித வாழ்வின் எல்லாக் கூறுகளையும் தழுவி நிற்பது. அரசியல், பொருளாதாரம் ஆகிவற்றோடு பண்பாடு, கலைகள், விஞ்ஞானம், சமயம், நம்பிக்கைகள் இன்னும் பிற வரலாறு என்பதில் ஆழக் கலந்து நிற்கின்றன என்பது அன்னல்ஸ் வரலாற்றுப் பள்ளியின் கருத்து. எரிக் ஹாப்ஸ்பாம் பிரிட்டனில் வாழ்ந்தாலும் அவர் மத்திய ஐரோப்பிய பண்புகளைக் கொண்டவர் என்றும் இவரை மதிப்பிடுவர். வரலாறு குறித்த அவரது ஒவ்வொரு நூலிலும் அரசியல், பொருளாதாரம் பண்பாடு, மரபுகள், கலைகள், விஞ்ஞானம் ஆகியவை கூடிக்கலந்து அமைந்திருக்கும்.
Book Details
Book Title தொடக்கக் காலக் கிளர்ச்சியாளர்கள் (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) (thodakka-kaala-kilarchchiyaalargal)
Author எரிக் ஹோப்ஸ்பாம் (Eric Hopesbam)
Translator ரகு அந்தோணி (Raku Andhoni)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, மார்க்சியம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha