Menu
Your Cart

மார்க்கெட்டிங் மாயாஜாலம்

மார்க்கெட்டிங் மாயாஜாலம்
-5 %
மார்க்கெட்டிங் மாயாஜாலம்
₹181
₹190
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மார்க்கெட்டிங். இது ஒரு தாரக மந்திரம். உங்கள் கண்ணில் தென்படும் அத்தனை விஷயங்கள் மீதும் பரம்பொருள் போல் ஆதிக்கம் செலுத்தும் சக்தி. ஒரு வரியில் சொல்வதென்றால் பொருள்களை விற்கப் பயன்படும் உத்தி. பெட்டிக்கடை தோறும் பெப்ஸி போர்டுகளும் கொல்லைப்புறம் வரை கோககோலா தட்டிகளும் தென்படுவதன் பின்னால் உள்ள சூட்சுமம். ஹைவே முழுவதும் ஹட்ச் ஹட்ச் என்று நாய்க்குட்டி தும்மியபடி நம்மைப் பின் தொடர்வதன் பின்னணி. மொபைல் எதுக்கு? டாக் பண்ணுறதுக்கு என்று த்ரிஷா உயரே இருந்து கண்ணடித்துப் புன்னகை செய்வதன் தேவ ரகசியம். வாடிக்கையாளரைக் குறிபார்த்துச் சுண்டி இழுப்பது. அந்த விஷயத்தில் போட்டியாளர்களை முந்திக்கொண்டு தன்னைத் திணித்துக்கொள்வது. பிசினஸில் இது மிக முக்கியம். நீங்கள் ஏரோப்ளேன் விற்கிறீர்களா, எலி மருந்து விற்கிறீர்களா என்பது முக்கியமல்ல. என்ன விற்றாலும் அது நிறைய விற்கவேண்டும். லாபம் கொட்டோகொட்டென்று கொட்டவேண்டும். அதற்குத்தான் தேவை மார்க்கெட்டிங். மார்க்கெட்டிங் என்பது உங்கள் தொழிலில் வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசம். உங்களுக்கு எது வேண்டும்? வெற்றிதானே? அப்படியானால், யோசிக்காமல் இதைப் படியுங்கள். எம்.பி.ஏ., படித்தால்தான் மார்க்கெட்டிங் புரியும் என்பதில்லை. இந்தச் சிறு புத்தகம் போதும். உங்கள் வர்த்தகம் கொழிப்பதற்கான வழிமுறைகளை அள்ளித்தருகிறது! சுய தொழில் புரிவோருக்கும், மிகப்பெரிய நிறுவனங்களில் மார்க்கெட்டிங் துறையில் வேலை தேடிக்கொண்டிருப்போருக்கும் - ஏன், கடைக்குப் போய் காசு கொடுத்து ஏதாவது வாங்கும் அத்தனை பேருக்குமே இது ஒரு அட்சய பாத்திரம். அள்ளிக்கொள்ளுங்கள் ஐடியாக்களை! சதீஷ் கிருஷ்ணமூர்த்தி அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா டெம்பிள் யுனிவர்சிடியில் எம்.பி.ஏ., படித்தவர். மெக்கான் எரிக்சன், முத்ரா போன்ற விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்தவர். கவின்கேர், கிரிக்கின்ஃபோ போன்ற நிறுவனங்களில் மார்க்கெட்டிங் துறையில் மேலாளராகப் பணிபுரிந்தவர். தற்போது பல தமிழக நிறுவனங்களுக்கு மார்க்கெட்டிங் ஆலோசகராகப் பணிபுரிகிறார். அத்துடன் IIPM சென்னை, ITM சென்னை, அம்ரிதா ஸ்கூல் ஆஃப் பிசினஸ், கோவை ஆகிய நிர்வாகவியல் கல்லூரிகளில் மார்க்கெட்டிங் துறையில் பாடங்கள் நடத்துகிறார். Marketing is a modern mantra. It is like God, influencing all that you see. To put it in a word, it is a technique for selling things. It is the secret behind the Pepsi boards in petty shops and Cocoa Cola posters in the rear of the house. It is the background of the 'hutch' puppy following us all through the highway. It is the angelic secret of Trisha telling us with a smile from above, winking her eyes, 'Why mobile? To Talk'. It is charming the target customer. It is to ram oneself before all the competitors and very important in business. Whether you are selling aeroplane or rat-killing stuff is not important. Whatever you sell, it should be sold in large numbers. Gain should be big. Marketing is needed only for that. Marketing is the difference between success and failure in your business. Do you want anything other than success? Then read this book without a second thought. Not necessary that you should be an M.B.A. to understand marketing. This slender volume is enough. It scoops and gives you ways and means of making your business prosper. This book is a boon for those doing business on their own, and those looking for marketing jobs in big companies and even for all those who go to shops to buy something with money. Scoop ideas! Sathish Krishnamurthy the author did his MBA in Philadelphia Temple University, USA. He has worked in advertisement companies like Meccan, Erickson and Mudra. Has also served in companies like Cavin Care and Crick Info as Manager in marketing field. At present he is Marketing Advisor to many companies in Tamil Nadu. He also teaches Marketing in colleges of administration like IIPM, Chennai, ITM, Chennai, and Amrita School of Business, Coimbatore.
Book Details
Book Title மார்க்கெட்டிங் மாயாஜாலம் (Marketing Mayajalam)
Author சதீஷ் கிருஷ்ணமூர்த்தி (Satheesh Krishnamurthy)
ISBN 9788183681032
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 136
Published On Nov 2004
Year 2005

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

புதிய பொருள் ஒன்றைத் தயாரித்துவிட்டீர்கள். அதனை மக்களிடம் எப்படி எடுத்துச்செல்லப் போகிறீர்கள்? உங்கள் பொருளை மக்கள் ஏன் வாங்கவேண்டும்? விளம்பரங்கள் இல்லாவிட்டால் உங்கள் பொருளையோ சேவையையோ மக்களிடம் ஒழுங்காக எடுத்துச்செல்லக்கூட உங்களால் முடியாது. அதுவும் சரியான விளம்பரங்கள் இல்லையேல், உங்கள் பணம் வீண்..
₹190
சேல்ஸ் என்பதைத் தேவையற்றதாக ஆக்குவதுதான் மார்க்கெட்டிங். உங்கள் மார்க்கெட்டிங் திறமையால், உங்கள் பொருளையோ சேவையையோ மக்கள் தாங்களாகவே முன்வந்து வாங்கிக் குவிக்கவேண்டும். உங்கள் லாபம் மேன்மேலும் பெருகவேண்டும். மார்க்கெட்டிங் என்பது அற்புதக் கலை. இதனை சரியாகச் செய்து வெற்றிகளை ஈட்டியவர்கள் பலர். ஆனால் ..
₹166 ₹175
தெரு கிரிக்கெட் விளையாடும் சிறுவன் தொடங்கி தெண்டுல்கர் வரை அத்தனை பேருக்கும் ஒரே கனவுதான். உலகக்கோப்பை. அதை மட்டும் வென்றுவிட்டால் போதும்; உலகத்தையே வென்றதற்குச் சமம். 1975 தொடங்கி இன்று வரையிலான உலகக்கோப்பைப் போட்டிகளின் புள்ளிவிவரத் தொகுப்பு மட்டுமல்ல; உங்களை சிலிர்க்க வைத்த, பிரமிக்க வைத்த, பெரும..
₹48 ₹50
நீங்கள் சுயதொழில் செய்பவராக இருக்கலாம் அல்லது அரசியல்வாதியாக இருக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் ஜெயிக்க, மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். வாடிக்கையாளர்களை நீங்கள் கவரவேண்டும். உங்கள் ப்ராண்ட்மீது அவர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும். ஒரே நேரத்தில் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து பலரும் கணைகளை வீ..
₹223 ₹235