Menu
Your Cart

மார்ட்டின் லூதர் கிங்: கறுப்பு வெள்ளை

மார்ட்டின் லூதர் கிங்: கறுப்பு வெள்ளை
மார்ட்டின் லூதர் கிங்: கறுப்பு வெள்ளை
-5 %
மார்ட்டின் லூதர் கிங்: கறுப்பு வெள்ளை
மார்ட்டின் லூதர் கிங்: கறுப்பு வெள்ளை
மார்ட்டின் லூதர் கிங்: கறுப்பு வெள்ளை
பாலு சத்யா (ஆசிரியர்)
₹181
₹190
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நான்கு கொலை முயற்சிகள். கத்திக்குத்து. காரணமே இல்லாமல் சிறை தண்டனை. தாக்குதல்கள். வீட்டில் குண்டுவீச்சு. இத்தனை நடந்தும், மார்ட்டின் லூதர் கிங்கால் தன் எதிரிகளை நேசிக்க முடிந்தது. சோர்ந்து போகாமல கம்பீரமாக எழுந்து நின்று போராட முடிந்தது. காந்திக்குப் பிறகு அஹிம்சைக் கொடி ஏந்திப் போராடி வென்ற ஒரு கறுப்பின அமெரிக்கரின் துடிப்பான வாழ்க்கைக் கதை இது! இனவெறி உச்சத்தில் இருந்த சமயம் அது. வெள்ளையர்களுக்குத் தனி பள்ளிக்கூடம் கறுப்பர்களுக்குத் தனி. வெள்ளையர்கள் உபயோகிக்கும் சாலைகளில் கறுப்பர்களுக்கு அனுமதியில்லை. குழந்தைகள் விளையாடும் இடங்கள் கூட தனித்தனி. உடல் ரீதியாக மட்டுமல்ல, உணர்வு ரீதியாகவும் கறுப்பர்கள் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டார்கள். மார்ட்டின் லூதர் கிங் ஒரு கனவு கண்டார். ஒவ்வொரு பள்ளமும் மேடாக்கப்படுவது போல். வெள்ளையர்களுக்குச் சமமாக கறுப்பர்கள் நடத்தப்படுவது போல். நிறத்தை வைத்து மதிப்பிடாமல் நடத்தைகள் மூலம் மனிதர்கள் மதிக்கப்படுவது போல். கறுப்பின மக்கள் சுதந்தரக் காற்றை சுவாசிப்பது போல். கனவு கண்டதோடு நிறுத்திக்கொள்ளவில்லை கிங். போராட ஆரம்பித்தார். வன்முறையை அல்ல; அறவழிப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். வெறுப்பை அல்ல, உன்னதமான நேசத்தைச் சுமந்து தன் எதிரிகளைச் சந்தித்தார். இரண்டு பரிசுகள் அவருக்குக் கிடைத்தன.நோபல், படுகொலை.
Book Details
Book Title மார்ட்டின் லூதர் கிங்: கறுப்பு வெள்ளை (Martin Luther King: Karuppu Vellai)
Author பாலு சத்யா (Balu Sathya)
ISBN 9788183683562
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 136
Published On Apr 2007
Year 2022
Edition 1
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Racism | இனவாதம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒரு தேசத்தின் ஜனாதிபதியை உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்கள் தலைவராக உரிமை கொண்டாடுவது சரித்திரத்தில் அபூர்வமாகத்தான் நடைபெறும். தொடர்ந்து நேசிக்கப்படும், தொடர்ந்து நினைவுகூரப்படும், தொடர்ந்து கொண்டாடப்படும் தலைவராக இன்று வரை நீடிக்கிறார் ஆபிரஹாம் லிங்கன். சிலிர்க்கவைக்கும் வாழ்க்கை வரலாறு. விறகு வெட்ட..
₹162 ₹170
பசும்பொன் முத்துராமலிங்க தேவரை நினைவுகூராமல் இன்றைய தேதி வரை, தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது. ஒரு சாதித் தலைவராக அவரைக் குறுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து, ஒரு தேசியத் தலைவராக அவர் இன்று அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படுகிறார்...
₹185 ₹195
பழைமை, மூட நம்பிக்கைகள், ஜோதிடம் ஆகியவற்றின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தன கல்வி நிறுவனங்கள். பல்கலைக்கழகங்களில்கூட அறிவியல் சிந்தனை பரவலாக இல்லாத காலத்தில் வாழ்ந்தார் நியூட்டன். அவர் எதிர்கொண்ட தடைகள் கொஞ்சநஞ்சமல்ல. வீட்டிலும் சரி, வெளியிலும் சரி அவருக்கு உதவக்கூடியவர்களோ, அவரிடம் பரிவோடு நடந்து..
₹57 ₹60