-5 %
Out Of Stock
MBA மூன்றெழுத்து மந்திரம்
எஸ்.எல்.வி.மூர்த்தி (ஆசிரியர்)
₹133
₹140
- ISBN: 9788184765304
- Publisher: விகடன் பிரசுரம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
பி.காம்., பி.எஸ்சி., இன்ஜினீயரிங் படித்தவர்கள் முன்பெல்லாம் தங்கள் துறையிலேயே முதுகலையைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், தற்போது பெரும்பாலோர் எம்.பி.ஏ. படிப்பைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். காரணம், சாஃப்ட்வேர் கம்பெனி முதல் தனியார் வங்கிகள் வரை அனைத்துத் துறையினருக்கும் எம்.பி.ஏ. படித்தவர்கள் தேவைப்படுகிறார்கள். படிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் செய்யப்பட்டு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்து விடுகிறது. ‘உலக அளவில் சி.இ.ஓ-க்கள் 40% பேர் எம்.பி.ஏ. படித்தவர்கள்’ என புள்ளிவிவரம் கூறுவதிலிருந்தே இந்தப் படிப்பின்மீது அநேகம் பேருக்கு அதீத ஆர்வம் ஏன் ஏற்படுகிறது என்பது புரிகிறது. எம்.பி.ஏ-வில் என்ன சொல்லித்தருகிறார்கள், எவ்வளவு செலவாகும், எந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது என விரிவாக விளக்குகிறார் நூல் ஆசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி. எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்களிடம் ‘ஏன் படிக்கிறேன் எம்.பி.ஏ.?’ என்று கேட்டு அவர்களிடம் பதில் வாங்கி ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பது சிறப்பு. எம்.பி.ஏ. படிக்க விரும்புபவர்களிடம் ‘கேளுங்கள் சொல்கிறேன்’ என்று கேட்டு அவர்களுக்கு பதில் சொல்லியிருப்பது கூடுதல் சிறப்பம்சம். உலக அளவில் பல்வேறு துறைகளில் வெற்றிபெற்றவர்களின் கதைகளையும் உதாரணத்தோடு கூறியிருப்பது பிசினஸில் முன்னேறத் துடிப்பவர்களுக்கும் பயன்படும். நாணயம் விகடனில் தொடர் வெளிவந்தபோதே வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘எம்.பி.ஏ. மூன்றெழுத்து மந்திரம்’, இப்போது நூல் வடிவில். புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் அனைவருக்கும் மூன்றெழுத்து மந்திரத்தின் மீது ஆர்வம் ஏற்படும் என்பது திண்ணம்.
Book Details | |
Book Title | MBA மூன்றெழுத்து மந்திரம் (MBA Moondrezhuthu Manthiram) |
Author | எஸ்.எல்.வி.மூர்த்தி (S.L.V.Murthy) |
ISBN | 9788184765304 |
Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |