- Edition: 1
- Year: 2007
- Page: 160
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தணல் பதிப்பகம்
மீண்டும் சுதந்திரப்போர்
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர். ஏறத்தாழ 50 ஆண்டுகள் பத்திரிகைத் துறையில் பணி செய்தவர். ஜனசக்தி, தீக்கதிர், நவமணி, அலைஓசை, மக்கள் செய்தி, அண்ணா ஆகிய நாளிதழ்களில் தொடர்ந்து அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவர்.
அநேகமாக தமிழகத்திலேயே அதிகமாக அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவர் சோலைதான். அமரர் எம்.ஜி.ஆரின் அண்ணா நாளிதழில் ஒன்பது ஆண்டுகள் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர்.
ஜுனியர் விகடன், நந்தன் ஆகிய ஏடுகளில் அரசியல் கட்டுரைகள் எழுதியவர். இப்போது குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் எழுதி வருகிறார்.
அமரர் ஜீவாவிற்குத் தோழனாய், அமரர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நண்பனாய் இருந்தவர். இவரது புதிய உலகம், புதிய பறவை என்றநூலுக்கு சோவியத்தின் நேரு பரிசு கிடைத்தது. அந்த நூல் ஓரிய மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அவரது ரோஜா சிரிக்கிறது. வீரத்தின் விளைநிலம் ஆகிய நூல்கள் பிரபலமானவை. ஜனநாயக ஜாம்பவான். சி.ஐ.ஏ. போன்ற நூல்கள் பரபரப்பானவை. புரட்சியில் பூத்த காந்திய மலர்கள். அமைதியாக ஒரு கங்கை, செய்திகளுக்கு அப்பால்… ஈழம் என்ற அவரது புதிய நூல்கள் அண்மையில் வெளியானது.
பிறந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம். அய்யன்பாளையம். இப்போது அவருக்கு வயது 76.
Book Details | |
Book Title | மீண்டும் சுதந்திரப்போர் (Meendum Suthanthirapor) |
Author | சோலை (Solai) |
Publisher | தணல் பதிப்பகம் (Thanal Pathipagam) |
Pages | 160 |
Year | 2007 |
Edition | 1 |
Format | Paper Back |