Menu
Your Cart

மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம்

மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம்
-5 % Out Of Stock
மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம்
₹309
₹325
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இதுவரை இப்படியொரு நூலை நீங்கள் எந்த இந்திய மொழியிலும் வாசித்திருக்கமுடியாது. இப்படியொரு உலுக்கியெடுக்கும் அனுபவத்தை இதுவரை எந்த எழுத்திலும் நீங்கள் பெற்றிருக்கமுடியாது. வாசித்துமுடித்த பிறகும் நீண்டகாலம் நினைவுகளில் தங்கியிருக்கும் உணர்வுபூர்மான பல கதைகளை நீங்கள் வாசித்திருக்கலாம். ஆனால் இது வாழ்நாள் முழுக்க உங்களைத் துரத்திக்கொண்டே இருக்கப்போகிறது. இதிலுள்ள ஒவ்வொரு கதையும் ஒரு புழுவைப் போல் உள்ளுக்குள் இருந்தபடி நெளிந்துகொண்டிருக்கப்போகிறது. மொத்தம் 21 கதைகள். இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ள கமலா தாஸ், அம்ரிதா ப்ரீத்தம், மண்ட்டோ, இஸ்மத் சுக்தாய், பிரேம்சந்த் என்று தொடங்கி புதுமைப்பித்தன் வரை பலருடைய சிறுகதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டிருந்தாலும், வெவ்வேறு கலாசாரப் பின்னணியிலிருந்து உருவானவை என்றாலும் அனைத்தும் ஒன்றுபடும் ஒரு புள்ளி, இந்தக் கதைகள் அனைத்துமே பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களின் துயர்மிகு வாழ்வைப் பதிவு செய்கின்றன என்பதுதான். கழுகுகள் குத்திக் கிழித்த பெண்ணுடலின் கதை இது. ஒரு பாலினம் இன்னொன்றை அடிமைப்படுத்தி ஆட்கொண்ட வன்முறையின் கதையும்கூட. ‘உலகின் புராதனத் தொழில்’ காலம் காலமாகப் பெண்களின் உடலிலும் உள்ளத்திலும் ஏற்படுத்தி வரும் தொடர் வலியை நமக்கு அப்படியே கடத்திவிடுகின்றன இந்த எழுத்துகள். அந்த வலியிலிருந்து இரு வழிகளில் மட்டுமே அவர்களுக்கு மீட்சி சாத்தியமாகியிருக்கிறது. மரணத்தின்மூலம். அல்லது தீரமிக்கப் போராட்டங்களின்மூலம். முதலாவது விரக்தியையும் இரண்டாவது நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன. வாழ்க்கை என்பதே இந்த இரண்டுக்கும் இடையிலான ஊசலாட்டம்தான், இல்லையா? மனித வாழ்வின் இருள் நிறைந்த பக்கங்கள் இவை. கண்களில் நீர் கோக்காமல் இதயத்தில் கனத்தைச் சேர்க்காமல் இவற்றை உங்களால் வாசித்துமுடிக்கமுடியாது. ருசிரா குப்தா ஒரு பெண்ணியவாதி, நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். பாலியல் தொழிலுக்காகப் பெண்கள் கடத்திச் செல்லப்படுவதை எதிர்த்துப் போராடும் அமைப்பொன்றை (Apne Aap Women Worldwide) நிறுவியிருக்கிறார். தனது புலனாய்வு எழுத்துகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். கிட்டத்தட்ட 20,000 பெண்கள் பாலியல் தொழிலிலிருந்து விடுபடுவதற்கு உதவியிருக்கிறார்.
Book Details
Book Title மெய்ப்பொய்கை: பாலியல் பெண்களின் துயரம் (Meippoigai Paaliyal Pengalin Thuyaram)
Translator சத்தியப்பிரியன் (Saththiyappiriyan)
ISBN 9789386737069
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 352
Year 2017
Category Short Stories | சிறுகதைகள், Sex | பாலியல் - காமம், Subaltern Studies | விளிம்புநிலை மக்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற சரித்திர நாவல்களை உங்களுக்குப் பிடிக்கும் என்றால் நிச்சயம் இந்தப் புதிய நாவலும் உங்களுக்குப் பிடித்துவிடும். முழுக்க வாசித்து முடித்தபிறகும் மீண்டுமொருமுறை, இன்னுமொருமுறை என்று வாசிக்கத் தூண்டும். சோழர் காலப் பின்னணியில் விரியும் பிரமாண்டமான இந்தப் பு..
₹399 ₹420
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழர்களின் வாழ்வில் கலந்த இரட்டைக் காப்பியங்கள். மணிமேகலை கூறும் தத்துவக் கூறுகளும் வாழ்வியல் கருத்துகளும் அறம் தொடர்பான நிலைப்பாடுகளும் மிக முக்கியமானவை. காதல் வாழ்க்கைக்கும் துறவு வாழ்க்கைக்கும் இடையேயான அத்தனை முரண்பாடுகளையும் மணிமேகலை போல அலசும் பிறிதொரு நூல் இல்லை ..
₹247 ₹260
தமிழின் முதன்மைக் காப்பியமான சிலப்பதிகாரம் தமிழர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. இன்று வரை கண்ணகி தமிழர்களின் தாய்த் தெய்வமாக, கொற்றவையாகப் போற்றப்படுகிறாள். இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் தமிழர்களின் கலைப் பொக்கிஷம். சிலப்பதிகாரத்தை நாவல் வடிவில் சொல்கிறது இந்தப் புத்தகம். சிலப்பதிகாரம் த..
₹295 ₹310