- Edition: 1
- Year: 2022
- Page: 624
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மேற்கத்திய ஓவியங்கள் I:
மேற்கத்திய ஓவியங்களின் பரம்பரை 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் வரையப்பட்ட குகை ஓவியங்களில் தொடங்கி இன்றுவரை பரந்து விரிகிறது. இதன் உச்சங்களைத் தமிழில் விளக்கி எளிதாகப் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ள முதல் நூல் இது. உலகம் முழுதும் பல்வேறு ஓவியக்கூடங்களில் இருக்கும் பேரோவியங்களையும் அவற்றை வரைந்த ஓவியர்களையும் அறிமுகம் செய்யும் ஆசிரியர், அவற்றின் வரலாற்றுப் பின்னணியையும் விளக்குகிறார். வாசகர்களுக்குத் தெளிவு ஏற்பட வேண்டும் என்ற பேரார்வத்துடன் எழுதப்பட்ட நூல் இது. அதன் பின்புலத்தில் இருக்கும் உழைப்பு அபாரமானது. பற்பல ஓவிய மேதைகள் இந்தப் புத்தகத்தில் பேசப்படுகிறார்கள். குகை ஓவியங்களில் தொடங்கி பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஓவியர்களுடன் முடியும் முதல் பாகம் 160 பல வண்ண ஓவியங்களுடன் மிக அழகான முறையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மேற்கத்திய ஓவியங்கள் II:
“ஓவியங்களைப் பற்றிய கட்டுரைகளோ, நூல்களோ தமிழில் அரிதாகவே வருகின்ற பின்புலத்தில் அதிலும் ஐரோப்பிய ஓவியங்களைப் பற்றி யாரும் எழுதாதபோது, பி.ஏ. கிருஷ்ணன் இந்த அரிய நூல் மூலம் மேற்கத்திய ஓவியங்களைத் தமிழ் வாசகர்களுக்கும் எளிதாக உள்வாங்கக்கூடிய நடையில் அறிமுகப்படுத்துகிறார்.” தியடோர் பாஸ்கரன், ‘தி இந்து நாளிதழில்’ ‘மேற்கத்திய ஓவியங்கள்’ முதல் நூலுக்குக் கிடைத்த வரவேற்பு இரண்டாம் கட்ட நூலுக்குக் கடுமையாக உழைக்கும் உற்சாகத்தைத் தந்தது. நூற்றிற்கும் மேற்பட்ட ஓவியர்களின் படைப்புகளைப் பற்றியும் அவர்களின் மேதைமையின் வீச்சு, ஓவியங்களின் வரலாற்றுப் பின்னணி என்பவை பற்றியும் சுருக்கமாக, ஆனால் தெளிவாகச் சொல்லுவதில் ஓரளவு வெற்றி அடைந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். பி.ஏ. கிருஷ்ணன்
Book Details | |
Book Title | மேற்கத்திய ஓவியங்கள் (Combo) (Merkaththiya Oviyangal) |
Author | பி.ஏ.கிருஷ்ணன் (P.A.Krishnan) |
Publisher | பனுவல் பரிந்துரைகள் (Panuval Suggestions) |
Pages | 624 |
Published On | May 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Hard Bound |
Category | Combo Offer |