
-5 %
மிதவை
நாஞ்சில் நாடன் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹95
₹100
- Edition: 1
- Year: 2018
- Page: 152
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விஜயா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ் நாவல் உலகில் வரலாறும், ஆன்மீகமும், தத்துவங்களும் வெகுவாக ஆட்சி செய்யும் நிலையில் ஒரு சமூகத்தை, போருலாதத்தம் அரசியலை, விடுதலையை பெற்றுத் தரும் வல்லமை கொண்ட நாவல்களை பார்ப்பது அரிதாகிப் போன சூழலில் பசியில் வாடும் நடுத்தரவர்க்கத்தை சார்ந்த ஒருவன் பிழைப்பிற்காக ஊரை விட்டு மும்பை பெரு நகரத்தில் படும் துன்பங்களை வெகு கவனமாக பதிவு செய்து இருக்கிறார். படிக்கும் பொது அவர்களின் வழியை உணர்ந்து அவர்களுக்காக நம்மை கண்ணீர் விடவைக்கிறார்.
‘மிதவை' முதற்பதிப்பு 1986 - ல் அன்னம் வெளியீடாக வந்தது. ஆயிரம் படிகள் விற்றுத் தீர ஆறாண்டுகள் ஆயின என்பதில் கவிஞர் மீராவுக்கு வருத்தம் இருந்தது. நல்ல நாவல்கள் கவனிக்கப்படாமலேயே போய்விடும் அபாயம் தமிழ் நாவல் உலகில் எப்போதும் நிரந்தரமானது. எல்லாவற்றுக்கும் நாளும் கோளும் சரியாக இருக்க வேண்டும்.
தமிழ் நாவல் உலகில் வரலாறும் ஆன்மீகமும் தத்துவங்களும் வெகுவாக ஆட்சி செய்யும் நிலையில் எனது நாவல்கள் ஆன்ம, சமூக, பொருளாதார, அரசியல் விடுதலைகளைப் பெற்றுத் தரும் வல்லமை கொண்டவை அல்ல. கும்பி கொதித்தவனுக்கு சோறு வடித்த கஞ்சித் தண்ணீரில் தேங்காய் துருவிப் போட்டு, தேங்காய் சிரட்டையில் ஊற்றி, கருப்புக் கட்டியைக் கடித்துக் கொண்டு கொதிக்கக் கொதிக்க உறிஞ்சத் தருவதைப் போல. எவ்வளவு தாமதமாக இரண்டாம் பதிப்பு வந்தாலும் எனது நாவல்கள் விற்றுப் போகின்றன என்ற மகிழ்ச்சியை கோவை விஜயா பதிப்பகத்தின் மூலம் உணருகிறேன்.
Book Details | |
Book Title | மிதவை (midhavai) |
Author | நாஞ்சில் நாடன் (Nanjil Nadan) |
Publisher | விஜயா பதிப்பகம் (vijaya pathipagam) |
Pages | 152 |
Year | 2018 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல் |