- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பனுவல் பரிந்துரைகள்
இண்டிபெண்டண்ட் சினிமா:
சினிமாவில் முயற்சி செய்பவர்கள் ஒரு படம் எடுக்க பல கோடிகள் செலவு ஆகும் என்று நினைத்துக்கொண்டு தன்னிலை மறந்து தேங்கி நிற்கிறார்கள். இந்த போலி நம்பிக்கைகளை சிதைக்கும்படியாக இந்த புத்தகமும் இதில் சொல்லப்படும் கதைகளும் இருக்கும். சினிமாவை மாற்றிய பல விஷயங்களை பற்றி இதில் பேச முயற்சி செய்துள்ளோம். ஒரு கலைஞனின் சுதந்திரமான படைப்பை தான் சுயாதீன திரைப்படம் என்று சொல்வார்கள் . ஒரு நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தாலும் ஒரு கலைஞனுக்கு சுதந்திரம் என்பது வெறும் பொய்யாகவே இருக்கின்றது.
பொஹிமியன்:
ஒரு கலைஞனின் மனதை ஆய்வுக்குட்படுத்திப் பார்க்கும்போது அவன் பல அதிசயங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது தெரிகிறது. அவன் இந்த மனிதக் குலத்துக்கு ஏதோ ஒரு உண்மையைச் சொல்ல நினைக்கிறான். அந்த உண்மை அதிர்ச்சி தரக்கூடியது, சமூகத்தையே திருப்பிப் போடக்கூடியது. அந்த உண்மையைக் கண்டு நாம் ஒளிந்துகொள்ளலாம், ஓடிப்போகலாம், அந்த உண்மையைச் சொல்கிற கலைஞனைத் நாம் தூற்றலாம்,புறக்கணிக்கலாம். ஆனால் அவன் எப்போதும் ஒரு உண்மையை சொல்லிக்கொண்டே தான் இருப்பான்.
இந்த சமூக கட்டமைப்பை உடைத்துக்கொண்டே தான் இருப்பான். அவன் கலைக்காகத் தன்னையே அழித்துக்கொள்கிறான். அவனே கலையாக மாறுகிறான்.
Book Details | |
Book Title | மிஸ்டு மூவிஸ் நூல்கள் (Combo) (missed movies books) |
Author | அப்துல் ரஹ்மான் |
Publisher | பனுவல் பரிந்துரைகள் (Panuval Suggestions) |
Published On | Jul 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Cinema | சினிமா, Essay | கட்டுரை |