- Edition: 1
- Year: 2021
- ISBN: 9789354735660
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: எழுத்துப்பிழை பதிப்பகம்
ஆண் – ஒரு வலுவான உடல் படைத்த குழந்தை. தன் மேல் உண்மையான அன்பை வெளிப்படுத்தும் தாயிடமோ, தந்தையிடமோ, சகோதர சகோதரிகளிடத்திலோ நண்பர்கள் தோழிகள் மற்றும் காதலியிடத்திலோ அவனுடைய குழந்தைத்தனங்கள் பழுத்த பலாப்பழத்தின் வாசனையைப் போல் இயற்கையாகவே வெளிவந்துவிடுகிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி அவனுக்குள் ஒளிந்திருக்கும் வெட்கம் இதுவரை அநேகமான கவிஞர்கள் எழுதாமல் விட்ட அபூர்வம். அவனுக்கு நெருக்கமானவர்கள் மீது அவன் காட்டும் அக்கறை ஈடில்லாதவை.
அதைத்தான் இந்தத் தொகுப்பில் ‘கண்ணம்மா’ எழுதியிருக்கிறாள்.
அவனுடனான காதல், காமம், ஏக்கம், அக்கறை, பாசம், தீண்டல், முத்தம், ஊடல்,
உரையாடல், சமிக்ஞை, சந்தோஷம், சண்டை முதலிய உணர்வுகள் ததும்பும் தருணங்களே ‘மிட்டாய் பயல்’.
‘மிட்டாய்ப் பயல்’ எல்லோருக்குமானதல்ல. ஒரு காதலி தன் காதலனுக்காகவோ, ஒரு மனைவி தன் கணவனுக்காகவோ, பல இடங்களில் நாம் குழம்பித் தவிக்கும் ‘இது என்ன மாதிரியான உறவு’ என்று புரியாத பெண் – ஆண் உறவுக்கு மிட்டாய்ப் பயல் முழுமையாகப் பொருந்திப்போவான்.
…இவை கவிதைகள் அல்ல
கவிதையான தருணங்கள்…
Book Details | |
Book Title | மிட்டாய்ப் பயல் (mittaaipayal) |
Author | மனோபாரதி (Manopaaradhi) |
ISBN | 9789354735660 |
Publisher | எழுத்துப்பிழை பதிப்பகம் (Ezhuthuppizhai Publications) |
Published On | Aug 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Hard Bound |
Category | Poetry | கவிதை |