- Edition: 1
- Year: 2016
- ISBN: 9789383067299
- Page: 304
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
உணவு சரித்திரம்
சாக்லேட்டின் மூலப்பொருள் கண்டுபிடிப்பாளருக்கு நீளமான வால் உண்டு என்றால் நம்ப முடியாதா? பெரியாரும் பிள்ளையாரும் ஒத்துப்போகும் விஷ்யம் எது? மயிலாப்பூருக்கு வந்த மார்க்கோ போலோ அங்கே சுவைத்து வியந்த்து என்ன? ஒரு அவுன்ஸ் ‘ இதை’க் கொடுத்தால் ஒரு அவுன்ஸ் தங்கம் கிடைத்தது. அது எது? மிளகு என்ற இத்தனூண்டு பொருளால்தான் உலக வரைப்படமே உருவானது தெரியுமா? கையறு நிலையில், பெற்ற மகனைக்கூட மறந்து, ஒரு கூடை மாம்பழத்தைத் தூக்கிக் கொண்டு நாட்டைவிட்டுஓடிய மகாராஜா யார்?
உணவின் சரித்திரப் பின்னணியின் புதைந்திருக்கும் சுவாரசியப் புதையல்கள் ஏராளம் தாராளம். உணவை நோக்கிய தேடல்களினால் தான் ஆதி நாகரிக வளர்ச்சி தொடங்கி நேற்றைய காலனியாதிக்கப் பரவல்கள் வரை நிகழ்ந்திருக்கின்றன. பல போர்கள் மூள, மூல காரணமும் உணவுதான். உணவின் பரவலால் உண்டான கலாச்சாரக் கலப்பினால், புதிய புதிய உணவு வகைகள் பிறந்தன. அவை ந்ம் ருசிக்குக் கிடைத்த வரங்கள். அதேசமையம் சாபங்களைச் சுமந்த கருப்புப் பக்கங்களும் உணவின் சரித்திரத்தில் உண்டு.
பல்வேறு உணவுப் பொருள்களின் ஆதி வரலாறு தொடங்கி, நவீன மாற்றம் வரை விவரித்துச் செல்லும் இந்நூல். கமகமக்கும் உணவினை விட, அந்த உணவின் சரித்திரம் அத்தனை ருசி மிகுந்த்து என்று உணர வைக்கிறது.
Book Details | |
Book Title | உணவு சரித்திரம் (பாகம் 1) (Unavu Sarithiram) |
Author | முகில் (Mugil) |
ISBN | 9789383067299 |
Publisher | சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixthsense Publications) |
Pages | 304 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | History | வரலாறு, Essay | கட்டுரை, Cuisine - Diet | சமயல் - உணவு |