- Edition: 1
- Year: 2017
- ISBN: 9789386737212
- Page: 163
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
முன்னேற்றம் இந்தப் பக்கம் - சோம.வள்ளியப்பன் :
வாழ்வில் முன்னேற வழி தெரியாமல் தவிப்பவர்களை கை பிடித்து அழைத்துச் செல்லும் நூல். வாழ்க்கையில் பலரும் தேடும் வெற்றி என்பது உடனே கிடைத்துவிடுவதில்லை. அது தேடத் தேடக் கண்ணாமூச்சி ஆடும். விரக்தியடைந்து சோர்ந்துவிடும் நேரம் அவர்களின் கைகளுக்கு மிக அருகிலேயேகூட இருக்கும். இதனால்தான் ‘விடாமல் முயற்சி செய்’ என்கிறார்கள். விடாமல் முயற்சித்தால் வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம். முன்னேற்றம் வேண்டும் என்பதை உணராதவர்கள் குறைவு. பலரிடமும் அதற்கான ஊக்கம் நிறையவே இருக்கிறது. ஆனால், வழி தெரியவில்லை. எப்படி முன்னேறுவது? அதற்கு ஏதும் நிச்சயமான வழிகள் இருக்கின்றனவா? அந்த வழியைப் பற்றி விளக்கமாகச் சொல்ல முடியுமா? என்கிற கேள்விகளுக்கான பதில்தான் இந்தப் புத்தகம். ‘நமது நம்பிக்கை’ மாத இதழில் தொடராக வந்து வாசகர்களின் அமோக பாராட்டுக்களைப் பெற்ற கட்டுரைகள் முழு புத்தகமாக இப்போது உங்கள் கையில். ஒரு Work Book போல, படிப்படியாக என்ன, எப்படிச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லித் தரும் முயற்சி. Key Drivers, Mile Stones மற்றும் Calendarising போன்ற நிர்வாக வழிமுறைகளை, வாழ்க்கை முன்னேற்றத்துக்குப் பயன்படுத்துவது எப்படி என்பதை மிக எளிமையாக, தெளிவாகச்சொல்லி வழிகாட்டுகிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன். இப்புத்தகம் உங்கள் கையில் இருந்தால் வாழ்வின் முன்னேற்றப் பாதையில் முதல் அடி எடுத்துவைத்து விட்டீர்கள் என்பது நிச்சயம்.
Book Details | |
Book Title | முன்னேற்றம் இந்தப் பக்கம் (Munnetram intha pakkam) |
Author | சோம.வள்ளியப்பன் (Soma Valliappan) |
ISBN | 9789386737212 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 163 |
Year | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம் |