Menu
Your Cart

அழகின் சிரிப்பு... அசத்தல் குறிப்பு!

அழகின் சிரிப்பு... அசத்தல் குறிப்பு!
-5 % Out Of Stock
அழகின் சிரிப்பு... அசத்தல் குறிப்பு!
முரளி கிருஷ்ணன் (ஆசிரியர்)
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அவசரம் கலந்த அதிரடியான நிகழ்வுகள் நிறைந்த இன்றைய வாழ்க்கை முறை, அனைவரையும் மூச்சுமுட்டத் துரத்திக் கொண்டுதான் இருக்கிறது. அந்த ஓட்டத்தால் உடலின் வாட்டம் குன்றி, ஒவ்வொருவரின் உடல் அழகும் அதல பாதாளத்தில் விழுந்துவிடுகிறது. அதை மேம்படுத்தும் வழிமுறைகள் பல இருப்பினும், நமது பொருளாதார நிலை நம்மை சற்றே தயங்க வைக்கிறது. அதை உடைத்தெறியும் விதமாக, அன்றாடம் வீட்டில் நாம் பயன்படுத்தும் இயற்கைப் பொருட்களை வைத்து அழகை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறிப்புகளாக இந்த நூலில் ஏராளம் உள்ளன. மனித உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் உரிய அழகை பெறும் இயற்கை இடுபொருட்களை நமக்குச் சுட்டிக்காட்டுவதோடு, சுருக்கமான செய்முறைகளையும், அரிய குறிப்புகளையும் எளிய முறையில் தொகுக்கப்பட்டுள்ளது. மஞ்சள், வேப்பிலை, கறிவேப்பிலை, நல்லெண்ணெய், கிராம்பு, முட்டையின் வெள்ளைக் கரு, அருகம்புல், தேங்காய் எண்ணெய், பூண்டு, இஞ்சி, வெந்தயம், காய்கறிகள், பழ வகைகள், கீரை வகைகள் என உடலின் புற அழகு மட்டுமல்லாமல், அக அழகையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான அசத்தல் குறிப்புகள் அனைத்தையும் எடுத்துரைப்பது இந்த நூலின் சிறப்பு. தலைமுடி தொடங்கி, தனம் தொடர்ந்து, குறுக்கு வசீகரிப்பதற்கான வழிமுறையோடு பாத வெடிப்பு வரையில் ஆரோக்கியமான வாழ்வுக்கு வேண்டிய தெளிவான செயல்முறைகளோடு பழகும் விதத்தில் அழகை அள்ளி அணைத்திருக்கிறார் நூலாசிரியர் முரளி கிருஷ்ணன். சிறுவர் & சிறுமியர், யுவன் & யுவதி, மூத்தோர் & முதியோர் என அனைத்து பிரிவினருக்கு தேவையான அத்தனை அழகுக் குறிப்புகளையும் ஒருங்கே தொகுத்து இருப்பது இந்த நூலின் தனிச்சிறப்பு. இது, அழகால் அனைவரையும் ஆச்சர்யப்படுத்த ஓர் எளிய வழிகாட்டி!
Book Details
Book Title அழகின் சிரிப்பு... அசத்தல் குறிப்பு! (Azhagin Sirippu Asathal Kurippu)
Author முரளி கிருஷ்ணன் (Murali Krishnan)
ISBN 9788184765175
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இயற்கை மருத்துவ முறை நம் மண்ணில் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆங்கில மருத்துவம் தீவிரமாக வளர்ந்ததால் நாட்டு மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆங்கில மருந்துகளோ பக்கவிளைவுகளை ஏற்படுத்திவருகின்றன. மரபு வழி மருத்துவம் பக்கவிளைவை ஏற்படுத்துவதில்லை. இதனால், சமீபகாலமாக மரபு வழி மருத்..
₹100 ₹105
200 கை மருத்துவக் குறிப்புகள்..
₹95 ₹100