Menu
Your Cart

முஸ்லிம் இந்தியா (இந்தியப் பிரிவினைப் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?)

முஸ்லிம் இந்தியா (இந்தியப் பிரிவினைப் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?)
-5 %
முஸ்லிம் இந்தியா (இந்தியப் பிரிவினைப் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?)
₹428
₹450
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
வரலாறு (ஹிஸ்டரி) விசாரணை மூலம் பெறப்பட்ட அறிவு. அது கடந்த காலத்தைப் பற்றிய ஆய்வும் ஆவணமும் ஆகும். எழுதப்பட்ட பதிவுகளுக்கு முன்பாக நிகழ்ந்தவை அனைத்தும் ‘வரலாற்றுக்கு முந்தைய நிகழ்வுகள் (ப்ரீஹிஸ்டரி)’ எனக் கருதப்படுகின்றன. இந்திய பெரு நிலப்பரப்பு பல்வேறு பண்பாடுகளாகவும் இனங்களாகவும் சமஸ்தானங்களாகவும் பிரிந்து கிடந்தது. இவற்றையெல்லாம் ஒன்றிணைத்து, இக்கால ஒன்றிய அரசாக ஆவதற்கு முஸ்லிம் ஆட்சியாளர்கள் பின்பற்றிய ஓரிறைவாதத்தின் பங்கு கணிசமானது. இந்தத் தேசத்தில் 852 ஆண்டுகள் ஆட்சியாளர்களாக இருந்த முஸ்லிம்கள், நாட்டுப் பிரிவினையில் அபாயகரமான எதிர்காலத்தைச் சமாளிக்க வேண்டியிருந்தது. அவர்கள் தங்களுடைய வரலாற்றை எழுதுவதில் போதிய கவனம் செலுத்தவில்லை. எழுதப்பட்ட வரலாறுகள் பெரும்பாலும் பெரும்பான்மையினருக்கு ஆதரவாகவே இருந்துவருகின்றன. இந்தப் புத்தகத்தில் முஹம்மத் நுஃமான் முஸ்லிம் லீக் உருவாவதற்கு முன்பும், இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பும், இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை குறித்து முஸ்லிம் நிலைப்பாட்டை முன்வைக்கிறார். அத்துடன் இந்தியாவின் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் அனைத்து முக்கிய முன்னேற்றங்களின் போதும் முஸ்லிம் பார்வையையும் அலசுகிறார். இதை 1857ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் இருந்த சூழலை விவரிப்பதில் தொடங்கி, முஸ்லிம்களுக்காக ஒரு சமூக அரசியல் நிறுவனத்தின் தோற்றம், பிரிவினை எதிர்ப்பியக்கம், சுயாட்சிமுறை, பாகிஸ்தான் பிரகடனம் எனப் பல்வேறு நிகழ்வுகளைப் பதினான்கு இயல்களில் தெளிந்த நடையில் பதிவு செய்கிறார். நூலாசிரியர் தேச பிரிவினைக்காக மேற்கொள்ளப்பட்ட பல பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றது மூலம் இந்தப் புத்தகம், நமக்கு ஒரு நேரடி சாட்சியமாகவும் இருக்கிறது; ‘வரலாறு’ என்னும் ‘குடை’ சொல்லுக்குள் நாம் சுமந்திருக்கும் நினைவுகளை மீளாய்வு செய்யவும் வாய்ப்பளிக்கிறது.
Book Details
Book Title முஸ்லிம் இந்தியா (இந்தியப் பிரிவினைப் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?) (Muslim india)
Author முஹம்மத் நுஃமான்
Translator முஹம்மது ஸெயின்
ISBN 978 81 7720 312 7
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 496
Year 2023
Edition 1
Format Paper Back
Category Islam - Muslims | இஸ்லாம், Indian politics | இந்திய அரசியல், Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha