-5 %
Out Of Stock
ரத்தன் டாடா
என்.சொக்கன் (ஆசிரியர்)
₹209
₹220
- Year: 2009
- ISBN: 9788184930511
- Page: 241
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வளமான பின்புலம். வசதிக்கும் வாய்ப்புக்கும் சற்றும் குறைவில்லை. அமெரிக்காவில் படித்து முடித்த ரத்தன் டாடா, ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் இரும்பாலையில் இணைந்தார். ஆறு ஆண்டு காலப் பயிற்சி. பெரிய பதவி எதுவும் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்கள் என்று அனைவருடனும் நெருங்கிப் பழகித் தொழில் கற்றார். கற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார் ரத்தன் டாடா. அலுவலகப் பணிகள் ஒரு பக்கம். இயந்திரங்களைப் பழுது பார்ப்பது, உலைக்கு எரிபொருள் அள்ளிப் போடுவது போன்ற பணிகள் மறு பக்கம். எதையும் விட்டு வைக்கவில்லை. சிறிய வேலை, பெரிய வேலை என்று எதுவும் இல்லை என்று நம்பினார். தனக்கென்று எந்த விசேஷச் சலுகையையும் அவர் எதிர்பார்க்கவில்லை. வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொண்ட பிறகே தன் கோட்டையைக் கட்ட ஆரம்பித்தார். பிரமிக்கத் தக்கதுதான் என்றாலும் படிப்படியான வளர்ச்சி அவருடையது. ரத்தன் டாடாவின் துடிதுடிப்பும் தொலைநோக்கும் செயல்வேகமும் அவரை டாடா குழும நிறுவனங்களின் தலைவராக உயர்த்தியது. இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் டாடா நிறுவனம் பிரபலமாக இருப்பதற்கு ரத்தன் டாடாவின் பங்களிப்பு முக்கியமானது. டாடா என்னும் பாரம்பரியமிக்க நிறுவனத்தில் புதுச் சிந்தனைகளைப் பாய்ச்சி நவீன யுகத்துக்குத் தகுந்தபடி தயார்படுத்தியவர் ரத்தன் டாடா. ஒரு தனி நபரின் வாழ்க்கையாக அல்ல, இந்தியத் தொழில்துறையின் வரலாறாகவும் இந்நூலை அணுகமுடியும்.
Book Details | |
Book Title | ரத்தன் டாடா (Ratan Tata) |
Author | என்.சொக்கன் (N.Chokkan) |
ISBN | 9788184930511 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 241 |
Year | 2009 |
Category | History | வரலாறு, Biography | வாழ்க்கை வரலாறு |