Menu
Your Cart

கலைஞர் என்றொரு ஆளுமை

கலைஞர் என்றொரு ஆளுமை
-100 % Out Of Stock
கலைஞர் என்றொரு ஆளுமை
₹0
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அரசியல், கலை என விரிந்திடும் கலைஞரின் வாழ்க்கை குறித்த பதிவுகள், தமிழக அரசியலில் ஒரு காலகட்டத்தின் வரலாறாகும். திருக்குவளை என்ற சிறிய கிராமத்தில் பிறந்து தமிழர்களின் மனதில் இடம் பிடித்த கலைஞரின் ஓட்டம், வெற்றி தோல்வியைக் குறித்த பிரேமை இல்லாமல் தொடர்ந்தது. இளம் வயதிலே முதலில் நாடகம், பின்னர் திரைப்படம் எனப் பொருள் ஈட்டிய கலைஞரின் அரசியல் வாழ்க்கை, சாதியரீதியில் ஒடுக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வில் விடியலை முன்னிறுத்தியது. சமூகத் தேவையின்பொருட்டு வரலாறு தேர்ந்தெடுத்து உருவாக்குகிற மாபெரும் ஆளுமைகள், எப்பொழுதும் தனிச்சிறப்புடையவர்கள். இன்னொரு நிலையில் சமூக வரலாற்றில் பாத்திரமாக உருவாகி, ஒரு காலகட்டத்தின் சமூகச் செயல்பாடுகள்மீது ஆதிக்கம் செலுத்துகிற ஆளுமைகள், ஒரு கட்டத்தில் வரலாற்றை உருவாக்குகிறவர்களாக மாறுகின்றனர். பல நூற்றாண்டுகளாக வைதிக இந்து சமயத்தின் ஆதிக்கத்தில் சம்ஸ்கிருத மொழியின் ஆளுகையுடன் போராடிக்கொண்டிருந்த தமிழ் மொழியானது தெலுங்கு, மராட்டி, பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தமிழை முன்வைத்து நடைபெற்ற அரசியல் என்பது ஒருவகையில் தமிழர் பண்பாட்டு அடையாள அரசியலாகும். அதன் முகமாக நிற்கிறார் கலைஞர்.
Book Details
Book Title கலைஞர் என்றொரு ஆளுமை (Kalaignar Endroru Aalumai)
Author ந.முருகேச பாண்டியன் (Na. Murugesa Pandian)
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 0
Year 2019

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும்திரைப்படம், மது ஆகிய இரண்டும் தமிழர்களின் வாழ்வில்ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சேதங்கள் அளவற்றவை. உலகம் முழுக்க சினிமாவின் ஆதிக்கம்இருந்தபோதிலும், கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆள்கின்றவர்கள், சினிமாவிலிருந்துவந்தது போன்ற நிலைமை, வேறு எந்த நாட்டிலும் இருக்க வாய்ப்பி..
₹57 ₹60
அரசியல் சாக்கடை என்ற கருத்தில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு கிடையாது. கல்வியாளர்களும்,சிந்தனையாளர்களும் அரசியலில் ஈடுபடாத காரணத்தினால் தான், கிரிமினல்களும்,ஊரை அடித்து உலையில் போடுகிற ஊழல் பேரழிவுகளும் அரசியலில் ஈடுபட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றி, ஊழலை நடைமுறையாக்கி விட்டனர். இன்னொருபுறம் திரைப்படம் என்ற..
₹76 ₹80