-5 %
Out Of Stock
நாய் இனங்களின் வரலாறு மற்றும் வளர்ப்பு முறைகள்
டாக்டர் S.R.கிஷோர் குமார் (ஆசிரியர்)
Categories:
பிராணி வளர்ப்பு
₹261
₹275
- Edition: 1
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விகடன் பிரசுரம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கற்கால மனிதன் முதல் கம்ப்யூட்டர் கால மனிதன் வரை மனித குலத்துடன் தொடர் உறவுகொண்ட விலங்கினம் எது என்றால் அது நாய்தான். வீட்டுச் செல்லப் பிராணிகளில் முதல்இடம்பெறும் நாய்கள், நன்றி உணர்ச்சிக்கு என்றென்றும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. தன் எஜமானனையே எல்லாமுமாக நினைத்து வாலைக் குழைத்து வாஞ்சை காட்டும் நாய்கள் பற்றிய முழு தகவல்கள் அடங்கிய புத்தகம் இது! விண்வெளிக்குச் சென்ற முதல் உயிரினம் என்ற பெருமை பெற்ற லைக்கா என்ற நாய், ஹிட்லர் படையில் இருந்த பேசும் நாய்கள், இறந்துவிட்ட தன் எஜமானன் வருகைக்காக பல வருடங்களாக தினமும் ரயில் நிலையம் சென்று காத்திருந்து உயிர்விட்ட ஹச்சிக்கோ போன்ற நாய்களின் நற்குணங்களைப் பற்றிய அரிய தகவல்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. நாய்களின் தோற்றம், பரிணாமம், நாய்களின் வகைகள், அவற்றின் குணங்கள், தமிழக வேட்டை நாய் இனங்களான கன்னி, சிப்பிப்பாறை, ராஜபாளையம் நாய் இனங்களின் குண இயல்புகள், நாய் வளர்ப்பு முறைகள், நாய்களுக்கு வரும் நோய்கள் அதற்கான தீர்வுகள், நாய்களுக்குப் பயிற்சி அளிப்பது எப்படி என அனைத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில், விரிவாக விவரித்துள்ள நூலாசிரியர், நாய்களைப் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களையும் கூறியுள்ளார். நன்றியுள்ள ஜீவனின் நலன் காக்கவும் அதை நன்கு பராமரிக்கவும், அந்த ஜீவனை வளர்த்து வருவோருக்கு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது இந்த நூல்!
Book Details | |
Book Title | நாய் இனங்களின் வரலாறு மற்றும் வளர்ப்பு முறைகள் (Naai inangalin varalaru matrum valarppu murai) |
Author | டாக்டர் S.R.கிஷோர் குமார் (Taaktar S.R.Kishor Kumaar) |
Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |
Edition | 1 |
Format | Paper Back |
Category | பிராணி வளர்ப்பு |