-5 %
நான் எப்படி எழுதுகிறேன்
க.பஞ்சாங்கம் (தமிழில்)
₹119
₹125
- Edition: 1
- Year: 2019
- ISBN: 9788193438749
- Page: 128
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
உலக வரலாற்றில் இலக்கியத்தின் மூலம் அல்லது எழுத்தின் மூலம் இறவாப் புகழ் பெற்றவர்கள் என மிகச் சிலரையே சுட்டுதல் கூடும். அவ்வாறு காலம் கடந்தும் தூரம் கடந்தும் தம் புகழை நிறுவிக் கொண்டவர் உம்பர்ட்டோ ஈகோ.
உம்பர்ட்டோ ஈகோ(1932-2016) ஒரு தத்துவ ஞானியாகவும், ஊடகவியலாளராகவும், கதை சொல்லியாகவும் திகழ்ந்தவர்.
உம்பர்ட்டோ ஈகோ நம் தலைமுறையின் நிகரில்லாச் சிந்தனையாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். ஏராளமான கட்டுரை நூல்களையும் அவர் படைத்துத் தந்திருக்கிறார். அவற்றில் ஒன்று On Literature என்ற தொகுப்பு நூல். இலக்கியப் படைப்பின் உத்திகளையும், இலக்கியம் குறித்து நிலவி வரும் பல கருத்துக்களுக்கு மறுப்புகளையும், ஒரு சீரிய படைப்பின் அடையாளங்களையும் புதிய பார்வைகளையும் இந்தக் கட்டுரைகளில் அவர் தந்திருக்கிறார். தெளிவும் சுவையும் மிக்க ஒரு நேர்முகத்தையும் இந்த நூல் கொண்டிருக்கிறது.
உம்பர்ட்டோ ஈகோவின் நூலிலிருந்து ஏழு கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து மொழியாக்கம் செய்து தந்திருக்கிறார். திறனாய்வாளர் முனைவர் க. பஞ்சாங்கம் (1949). அவர் தேர்ந்த விமர்சகராகப் புகழ் பெற்றிருக்கும் பேராசிரியர்.
திறனாய்வுக்கான விருதுகள் பல பெற்றுள்ள பேராசிரியர் கவிதை நூல்களையும் படைத்துத் தந்துள்ளார். தில்லி சாகித்திய அகாதெமி பொதுக் குழு உறுப்பினராக விளங்கிய க. பஞ்சாங்கம் புதுவை பாரதி அன்பர்கள் அறக்கட்டளைத் தலைவராகத் திகழ்கிறார்.
Book Details | |
Book Title | நான் எப்படி எழுதுகிறேன் (naan-eppadi-ezhuthugiren) |
Translator | க.பஞ்சாங்கம் (Ka.Panjaangam) |
Publisher | அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI)) |
Pages | 128 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Literature | இலக்கியம் |