-7 %
Out Of Stock
நச்சுக் கோப்பை
கலைஞர் மு.கருணாநிதி (ஆசிரியர்)
Categories:
Drama Play | நாடகம்
₹14
₹15
- Edition: 1
- Year: 2007
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நச்சுக் கோப்பை என்ற நாடக நூல், கலைஞர் மு. கருணாநிதியால் எழுதப்பட்டுள்ளது. கருணாநிதி எழுதிய முதல் நாடகம் 'பழனியப்பன்' என்னும் இந்த நாடகமே 'சாந்தா' என்னும் பெயாிலும் 'நச்சுக்கோப்பை' என்னும் பெயரிலும் நுாற்றுக்கணக்கான மேடைகளில் நடிக்கப்பட்டது. மதுவினால் வரும் தீங்கினை எடுத்துக்காட்டும் வகையில் நச்சுக்கோப்பை என்று பெயரிடப்பட்டு வெளியாகியது.
சாந்தாவும் எதிர் வீட்டு ஏகாம்பரமும் காதலர்கள். இவர்களுக்கு சாந்தாவின் அண்ணன் பழனியப்பன் ஆதரவு அளிக்கிறான். இவர்களின் காதலுக்கு சாந்தாவின் அப்பாவான மணியப்ப முதலியார் தடை விதிக்கிறார். ஏகாம்பரம் ஏழை என்பதால் திருமணம் செய்துவைக்க முடியாதெனக் கூறுகிறார். முடிவில், சாந்தாவின் விருப்பமின்றி சாந்தாவுக்கு அய்யரின் முன்னிலையில் அழகப்பனுடன் திருமணம் நடக்கிறது. அழகப்பன் ஒரு குடிகாரன்; சீட்டாட்டம் ஆடியே வாழ்பவன். சாந்தாவின் பிரிவுக்குப் பின் ஏகாம்பரம் இராணுவத்திற்கு செல்கிறான். அழகப்பன் குடித்தே இறக்கிறான். அழகப்பனின் நண்பனான மதுவின் கொடுமையை அறிந்தவனான சிவகுரு அழகப்பனின் மைத்துனன் பழனியப்பனின் நண்பனாகிறான். இராணுவம் சென்ற ஏகாம்பரம் இதனிடையே திரும்பவும் ஊருக்கே வருகிறான். இந்நிலையில், ஏகாம்பரத்திற்கு சாந்தாவைத் திருமணம் செய்து வைக்க பழனியப்பன் தன் தகப்பனிடம் கூறுகிறான். வழக்கம் போல அவர் முடியாதெனக் கூறுகிறார். பிறகு, தன் தந்தையைக் கொன்றுவிட்டு, விஷம் குடித்துவிடலாம் என பழனியப்பன் நினைக்கிறான். அப்போது, பழனியப்பனை மிரட்டுமாறு ஆள் அனுப்புகிறார்,பழனியப்பனின் தகப்பனான மணியப்ப முதலியார். மிரட்ட வருபவன் கத்தியால் கொன்றேவிடுகிறான் பழனியை. முடிவில், சிவகுரு பழனிக்காக சாந்தா மற்றும் ஏகாம்பரத்தை சேர்த்து வைப்பதுடன் நாடகம் முடிகிறது.
Book Details | |
Book Title | நச்சுக் கோப்பை (nachu-koppai) |
Author | கலைஞர் மு.கருணாநிதி (Kalaignar Mu.Karunaanidhi) |
Publisher | பாரதி புக் ஹவுஸ் (Bharathi Book House) |
Year | 2007 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Drama Play | நாடகம் |