Menu
Your Cart

நடிகைகளின் கதை

நடிகைகளின் கதை
-5 % Out Of Stock
நடிகைகளின் கதை
யுவ கிருஷ்ணா (ஆசிரியர்)
₹143
₹150
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்திய நடிகைகள், தமிழ் நடிகைகள் என்கிற குறுகிய எல்லை அமைத்துக் கொள்ளாமல் உலகளவில் ஏதோ ஒரு காரணத்துக்காக பேசப்படுகிற நடிகைகள் என்று பலரையும் அறிமுகம் செய்தோம். இப்போது நூலாக்குவதற்காக மொத்தமாக வாசிக்கும்போதுதான் தெரிகிறது, கிட்டத்தட்ட எல்லா நடிகைகளின் கதையையுமே ஏதோ ஒரு சரடு இணைக்கிறது என்று. தொடராக எழுதத் தொடங்கியதிலிருந்தே வாசகர்களிடமிருந்து கடிதங்கள் வந்துக் கொண்டே இருக்கும். ‘சில்க்கின் கதையை எப்போது எழுதுவீர்கள்?’. எங்களுக்கும் எழுத ஆசைதான். ஆனால் எழுதக்கூடாது என்று விடாப்பிடியாக ஒரு லட்சுமணரேகையை எங்களுக்கு முன்பாக வரைந்துக் கொண்டோம். ஏனெனில் சில்க்கின் கதையை அறியாத தமிழரே இருக்க முடியாது. பல்வேறு கட்டுரைகளாகவும், புத்தகங்களாகவும் வந்த கதை அவருடையது. அதுவுமில்லாமல் ‘நடிகைகளின் கதை’யில் சில்க் என்பது க்ளிஷேவான விஷயமாக இருக்கும் என்கிற தயக்கமும் இருந்தது. எனினும் சில்க்கை தவிர்க்க முடியுமா என்ன. ஃபிலிம்பேர் இதழில் (1984 டிசம்பர்) தன் திரையுலக வாழ்வின் உச்சத்தில் இருந்தபோது சில்க் கொடுத்திருந்த நேர்காணலை அப்படியே தமிழாக்கம் செய்து கடைசி அத்தியாயமாக கொடுத்தோம். அரிதான அந்த பேட்டி சில்க்கின் ஆளுமையை வாசகர்கள் யூகித்துக்கொள்ள வழிவகுக்கும். இந்நூல் அச்சுக்கு செல்ல தயாராகும் நேரத்தில் இன்னொரு இனிய திருப்பம். ஷகிலா, ‘தினகரன் வெள்ளிமலர்’ இதழுக்காக நேர்காணல் தர ஒப்புக்கொண்டார். ‘ஷகிலா பேசுகிறேன்’ என்கிற தலைப்பில் வெளியான அந்த நேர்காணல், திரைக்குப் பின்னான ஷகிலாவை அச்சு அசலாக வாசகர்களிடம் கொண்டு சேர்த்தது. ஷகிலா குறித்த பல கற்பிதங்களை உடைத்திருக்கும் அந்த பேட்டியையே இந்நூலின் முதல் அத்தியாயமாக சேர்த்திருக்கிறோம். இந்த நூலின் தலைப்பில் வேண்டுமானால் ‘கதை’ இருக்கலாம். ஆனால் இங்கே விவரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் நூறு சதம் நிஜம்.
Book Details
Book Title நடிகைகளின் கதை (Nadigaigalin Kathai)
Author யுவ கிருஷ்ணா (Yuva Krishna)
ISBN 9789385118449
Publisher சூரியன் பதிப்பகம் (Suriyan pathipagam)
Pages 0
Year 2015

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இளமை ததும்பும் சுவாரசியமான எழுத்து நடையால் வசீகரித்து வரும் யுவகிருஷ்ணாவின் அழிக்க பிறந்தவன் திருட்டு விசிடியை மைய்யமாக கொண்ட விறு விறு கதை. ‘படுவேகமான த்ரில்லர் வகையறா’ நாவல் என சக எழுத்தாளர்கள் சான்று கொடுத்துள்ளனர். பர்மாபஜாரைப் பற்றியும் அங்கு நிகழும் சட்ட்திற்க்கு புரம்பான செயல்கள் நிழல் வியாபா..
₹95 ₹100
கதை கேட்காத மனிதர்களும் இல்லை. கதை சொல்லாத நாவுகளும் இல்லை. பிரபஞ்சமே கதைகளால் ஆனதுதான். கதைகளால் நிரம்பியதுதான். முக்கியமான விஷயம், இப்படி கதை சொல்வதில் பெண்கள் கெட்டிக்காரர்கள் என்பதுதான். தங்கள் குழந்தைகளுக்கு, பேரன் & பேத்திகளுக்கு கதை சொல்வதற்கென்றே பிறந்தவர்கள் போல்தான் பெண்கள் வாழ்கிறார்கள். ..
₹143 ₹150
இந்தியத் திருமணங்கள் அதிலும் குறிப்பாகத் தமிழகத் திருமணங்கள் ஏராளமான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கொணடது. அது எல்லாவ்ற்றிற்கும் முக்கியமான காரணங்களை முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தனர். கல்யாண வீடுகளில் தங்களைச் சுற்றி நடக்கும் இந்தச் சடங்குகளின் அர்த்தம் தெரியாமல்தான் மணமக்கள் அமர்ந்திருக்கின்றன..
₹181 ₹190
அடையாறு, கூவம் போன்ற அழகிய நதிகளைச் சாக்கடைகளாக்கி வேடிக்கை பார்த்தது சென்னை. வடிகால்களை எல்லாம் பிளாஸ்டிக் குப்பைகளால் நிரப்பி, குப்பைத்தொட்டிகள் ஆக்கினார்கள் மக்கள். பொங்கிய பெருவெள்ளத்தில் நகரமே தவித்ததை வேடிக்கை பார்த்தன நதிகள். குப்பைகளோடு சேற்றையும் கொண்டு வந்து வீடுகளுக்குள் போட்டுச் சென்றது ..
₹114 ₹120