-4 %
Out Of Stock
அந்நியர்கள் உள்ளேவரலாம்
யுகபாரதி (ஆசிரியர்)
₹48
₹50
- Edition: 1
- Year: 2007
- Page: 100
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நேர்நிரை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எளிய சொற்களில் இதயத்தை ஈர்க்கும் கவிதைகளைத் தந்துவரும் யுகபாரதி, திரைப்பாடலாசிரியரும்கூட. ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள்மூலம் மக்களிடம் அறிமுகமும் பிரபலமுமான அவருடைய நான்காவது கவிதைத் தொகுப்பு இது.காதல் என்னும் ஒற்றைச் சொல்லுக்குள் ஒளிந்துள்ள மர்மங்களையும் அர்த்தங்களையும் விடலைத்தனத்துடன் யுகபாரதி அணுகி எழுதிய கவிதைகள். கவித்துவத்திற்கு அப்பாலுள்ள வெளிகளில் இக்கவிதைகள் சஞ்சரிக்கின்றன. இலக்கியத்தை எளிய மக்களின் குரலாகவும் எளிய மக்களுக்கானதாகவும் ஆக்கிவரும் யுகபாரதியின் முக்கியமான கவிதைநூல்களில் இதுவும் ஒன்று. கல்லூரி மாணவர்களின் கையேடாக மாறிப்போன நூல் இது. அச்சுப் பதிப்பில் பரவலான வரவேற்பைப் பெற்ற இந்நூல் மின்னூலாகவும் வருகிறது. யுகபாரதி, தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கணையாழி, படித்துறை ஆகிய இதழ்களின் ஆசிரியக் குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர். தொடர்ந்து இரண்டு முறை சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர். வெகுசனத் தளத்திலும் தீவிர இலக்கியத் தளத்திலும் ஒருசேர இயங்கிவரும் இவருடைய திரை உரையாடல்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கவனத்தைப் பெற்று வருகின்றன. இவரே இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணிப் பாடலாசிரியர்
Book Details | |
Book Title | அந்நியர்கள் உள்ளேவரலாம் (Anniyarkal Ulley varalam) |
Author | யுகபாரதி (Yugabharathi) |
Publisher | நேர்நிரை பதிப்பகம் (Naer nirai Publications) |
Pages | 100 |
Year | 2007 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Love | காதல், Poetry | கவிதை |