
-100 %
Out Of Stock
நீலக்கடல்
நாகரத்தினம் கிருஷ்ணா (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹0
₹0
- Year: 2005
- Page: 520
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நாகரத்தினம் கிருஷ்ணாவின் வரலாற்றுப் பார்வை மிக விரிந்தது. ஆட்சியாளர்களின் காவல் முறை, பரம்பரை, காதல் என்று மட்டுமே நிலை பெற்றிருந்த வரலாற்று நாவல் தடத்தை மாற்றிப்போட முயற்சித்திருக்கிறார் ஆசிரியர். சாதாரண மக்கள் வியர்வையிலிருந்தும் ரத்தத்திலிருந்தும் இவர் கட்டி எழுப்பும் பாத்திரங்கள் விரிகின்றன. வாழ்க்கையின் பசிய வாசனை நாவல் முழுதும் வீசுகிறது. மனித மனதின் வன்மங்கள், ஆசைகள், கோபங்கள் என்று நீடிக்கிற சகல அடிப்படைக் குணாம்சங்களிலும் எழுத்து பயணம் செய்ய வேண்டும். இலக்கியத்தின் அடிப்படைகளில் மிகவும் முக்கியமான அம்சம், உன்னதங்களைச் சித்தரிப்பது மட்டும் அல்ல. மனித குலம் இது காறும் ஏற்றுப் போற்றி வந்திருக்கிற சகல கயமைகளையும், சகல போலிமைகளையும் எந்தச் சார்பும் அற்று விசாரணை செய்ய வேண்டிய பொறுப்பும் இலக்கியத்துக்கு உள்ளது. நாகரத்தினம் கிருஷ்ணா அந்தப் பொறுப்பைக் குறைவற நிறைவேற்றி இருக்கிறார். - பிரபஞ்சன்
Book Details | |
Book Title | நீலக்கடல் (Neelakkadal) |
Author | நாகரத்தினம் கிருஷ்ணா (Nagarathinam Krishna) |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 520 |
Year | 2005 |