- Edition: 01
- Year: 2018
- ISBN: 9788193635544
- Page: 162
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நள்ளிரவின் நடனங்கள்(சிறுகதைகள்) - அராத்து :
பொதுவாக நாம் இலக்கியம் என்பது மொழியை லாவகமாக கையாளுதல்,கடைசிக்கு அதை ஒரு pre-requisite ஆக வைத்துக்கொள்கிறோம். எனவே வட்டார வழக்கில் அல்லது செவ்வியல் மொழியில் எழுத படாத கதைகள் இலக்கியம் இல்லை என நமக்குள் பேதைமை இருக்கிறது. இந்த கதை இதை தவிர வேறோரு நடையில் எழுதிவிட முடியாது.
(எ.கா) கடல் உள்ளடக்கிய சூரியனின் செவ்வந்தி பூ நிற மாலை ஒளியில் கமலக் கண்ணனின் முதாதைகளின் கற்பியல் நெறியும் அடங்கியது போலும்.
ஏனென்றால் இது சராசரிகளின் கதை. அதற்குரிய இயல்பான மொழி இதுவே.
அடுத்து சாரு சொன்னது போல இது angst பற்றிய கதை. தமிழில் அதை மைய ஒட்டமாய் வைத்து கதை எழுதியவர்கள் தங்கள் உரத்த கதை சொல்லல் முறைகளில் அதனை மூழ்கடித்து விட்டிருக்கிறார்கள். அது அவர்கள் படித்த உலக இலக்கியமும் சிந்தனை முறைகளும் ஏற்படுத்திய மோசமான விளைவுகள்.ஆங்ஸ்டை அதன் இயல்பு முறையில் வெளிபடுத்தியதே இல்லை. ஏனெனில் அக்கதையின் மாந்தர்கள் ச்ராசரிகள் அல்ல. எனவே அவர்களின் உணர்வுகளும் ஆங்க்ஸ்ட் என வகுக்க முடியாது. அராத்து சராசரிகளின் மொழியில் ஒரு நல்ல சிறுகதை எழுதியிருக்கிறார் என்றே நினைக்கிறேன். அடுத்து கதையில் ஏதோவொன்று நிகழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். கமல கண்ணன் எதோ ஒரு ருஷ்ய அழகியை செட் செய்வது போலவோ அல்லது எதேனும் அசம்பாவிதம் நடப்பது போலவோ எழுதப்பட்டிருந்தால் இது சாதாரண வாசகனை tease செய்து கதையை தொடர்ந்து படிக்க வைக்கும் ஜனரஞ்சக பாணி சுமாரான கதை ஆகிவிட்டிருக்கும்.J.D.Salinger’s Catcher in the Rye பள்ளியில் இருந்து துரத்தப்பட்ட ஒரு மாணவனின் ஒன்றுமே நடக்காத இரவு வாழ்க்கை தானே. அதை தானே அங்க்ஸ்ட் காவியம் என்று சொல்கிறார்கள். ரோமெனிய படமான Three months,two weeks and one day பற்றிய எதிர்மறை விமர்சநங்கள் எலலாவற்றையும் எடுத்து பாருங்கள். கதையில் ஒன்றுமே நடப்பத்தில்லை,கருவுற்றிருந்த மாணவி இறக்கவே இல்லை என்பது போல இருக்கும். சராசரி விதையில் இருந்தும் இலக்கிய விருட்சம் முளைக்கும்
சாரு சொன்னது போல நுணுக்கமான விவரணைகள் உரையாடல்கள் மன எழுச்சி எல்லாம் கற்பிதங்கள் தான். அவை இக்கதைக்கு சரிவராது என்பது என் எண்ணம் என்று எற்கனவே சொல்லிவிட்டேன். அதற்கு மேல் அது அவர் அவர் சொந்த கருத்து,cognitive bias மட்டுமே
முதலில் உள்ள எதிர்பார்ப்பும் வேட்டையாடுதலும் நீர்த்து போய் மனைவியின் பாற் எண்ணம் திரும்பும் ஒரு சராசரியின் அழுப்பும் சோர்வும் அதன் அங்க்ச்ட் உம் சரியாக வந்துள்ளது என்றே எண்ணுகிறேன்.ஆங்க்ஸ்ட் மட்டுமல்ல சிக்மண்ட் ப்ராய்டின் Madonna-whore complex உளவியல் கதையினூடாக வெளிப்பட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். பொதுவாக ஆண்களுக்கு அதுவும் இந்திய ஆண்களுக்கு இந்த காம்பளக்ஸ் நிறையவே இருப்பதாக நினைக்கிறேன். தங்கள் மனைவிகள் புனிதர் மடோன்னா(பாடகி இல்லைங்க) போன்றும் தாங்கள் அனுபவிக்க நினைக்கும் பெண்கள் தே.. என்று எண்ணம் உண்டு. முக்கியமாக வெளி நாட்டு பெண்கள் ‘அதற்கு’ அலையும் பெண்கள் என்றும், ‘கூப்பிட்டா வருவாங்க’ என்ற தவறான எண்ணம் ரொமவே உண்டு(எனக்கும் இருத்தது).. அராத்துவின் கதை அந்த மனகூறுக்கு ஒரு anti thesis அல்லது நாணயத்தின் இன்னோரு பக்கம். சுஜாதா ஒரு கதையில் இவ்வாறு எழுதியிருப்பார் : சில பொண்ணுங்க கண்ணில பெட் ரூம் தெரியும் ஆனா பதிவிரதையா இருப்பா..சில பொண்ணுங்க கண்ணகி மாதிரி இருக்கும்,உட்காருநா படுத்திருவாங்க...
நூளிலிருந்து சில......
Book Details | |
Book Title | நள்ளிரவின் நடனங்கள் |
Author | அராத்து (Araathu) |
ISBN | 9788193635544 |
Publisher | Zero Degree Publications (zero degree publishing) |
Pages | 162 |
Published On | Jan 2018 |
Year | 2018 |
Edition | 01 |
Format | Paper Back |