
-5 %
Out Of Stock
ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம்
க.ஸ்ரீதரன் (ஆசிரியர்)
₹285
₹300
- Page: 384
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்த நூல் 32 பத்திகளாகப் (அடிவைப்பு) பிரிக்கப்பட்டு, மிக எளிய பழகு தமிழில் விளக்கப்பட்டுள்ளது, மேய்ச்சலுக்குச் சென்ற தாய்ப்பசு கன்றின் ஞாபகம் வர மாலை நேரத்தில் விரைவாக கன்றிடம் ஒடி வருவது போல பாதுகையும் சித்திரகூடத்திலிருந்து ( ராமனிடமிருந்து) அயோத்திக்கு ஓடிவந்ததை படிக்கும்போது, மகாதேசிகரின் கற்பனைத்திறன் கண்டு வியக்கிறோம். ( பக்கம் 74). அயோத்தியை, பாதுகைகள் ஆண்ட போது ( பரதன் ஆண்ட 14 ஆண்டுகளில்) எந்த குழந்தையும் இறக்கவில்லை; பிராய்ச்சித்தம் தேடும் அளவிற்கு எவ்வித குற்றமும் நிகழவில்லை என்ற செய்தி ( பக்கம். 80 ) யை சுலோகம் 153ல் காணும்போது, தற்போது அந்த பாதுகைகள் ஆட்சி செய்யக்கூடாதா என்ற ஏக்கமே நமக்கு உண்டாகிறது. பாதுகைகள், சீதாதேவியால் வணங்கப்பட்டதற்கான காரணங்களை 229,230 சுலோக விளக்கவுரையில் படித்து மகிழலாம். ( பக்கம்.104 ) எல்லா விஷ்ணு ஆலங்களிலும் உள்ள விக்ரக வடிவங்களில் பாதுகையுடன் கூடிய எம்பெருமான் திருமேனியை காண இயலாது; ஆனால், திருவரங்கத்தில் மட்டும் பாதுகையுடன் கூடிய திருமேனியைக் காணலாம் என்ற செய்தியை, சுலோகம் 240ல் ( பக்கம்.107) படித்து ரசிக்கலாம். இந்நூலைப்பற்றி டாக்டர் கலியன் சம்பத்து என்ற தினமலர் மதிப்புரை ஆசிரியர் விவரமாக மதிப்பிட்டுள்ளார். தினமலர் நாளிதல் தேதி 23.11.2014. இந்த நூல், 32 பத்ததிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பத்ததி என்றால் அடிவைப்பு, காலடி என்று பொருள். அதாவது இந்த நூலை பாதுகையே இயற்றினாள் என்பது ஸ்வாமியின் கருத்து (ச்லோகம் 1005). இதனை அடியொட்டியே பத்ததி என்று அமைத்தார். ஸ்ரீரங்கநாத பாதுகா ஸஹஸ்வரம் என்னும் இந்த நூலை அன்றாடம் பாராயணம் செய்து வந்தால் எப்படிப்பட்ட துன்பங்கள் வந்தாலும், சூரியனைக் கண்ட பனிபோல் விலகும் என்பது பரந்த கருத்தாகும். அன்பர்களே! ஸ்ரீரங்கநாதனுடைய பாதுகையை ஆராதனை செய்யுங்கள் - திருவரங்கன் உங்களை விட்டு அகலமாட்டான்.
Book Details | |
Book Title | ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம் (Sri Paadhuga Sahasram) |
Author | க.ஸ்ரீதரன் (Ka.Sridharan) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 384 |