Menu
Your Cart

நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்

நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்
-5 %
நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்
ஆ.திருநீலகண்டன் (ஆசிரியர்)
₹166
₹175
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இன்றைக்கு எண்பதாண்டுகளுக்கு முன்பு, நிலவுடைமை அமைப்பு வலுவாகக் கோலோச்சியிருந்த அன்றைய தஞ்சை மாவட்டத்தின் நீடாமங்கலத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடந்தது. அப்போது ஏற்பாடு செய்திருந்த சமபந்தி போஜனத்தில் கலந்துகொண்டதற்காகத் தாழ்த்தப்பட்ட தோழர்கள் இருபதுபேர் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக எந்தக் கட்சியும் கிளர்ந்தெழாத நிலையில் பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை இயக்கம் அவர்கள் சார்பில் முனைந்து போராடியது. வன்கொடுமைக்குக் காரணமான நிலக்கிழார் பார்ப்பனரல்லாத உயர்சாதியினராக இருந்தபொழுதும் பெரியார் உறுதியுடன் நீதிமன்றம் வரை சென்று போராடினார். இந்த இழிவன்கொடுமையை அதனுடைய வரலாற்றுச் சூழலில் பொருத்தி ஏராணமான ஆவணங்கள், சமகாலச் செய்திகள், கள ஆய்வுத் தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்தி சேரன்மாதேவி, முதுகுளத்தூர், கீழ்வெண்மணி முதலான குறிபீட்டு முக்கியத்துவமுடைய நிகழ்வாக நீடாமங்கலத்தை முன்னிறுத்தியிருக்கிறார் ஆ. திருநீலகண்டன். திராவிட இயக்கத்துக்கும் தலித்துகளுக்குமான உறவு நிலை பற்றிய ஆய்வுக்கு இந்நூல் முக்கியப் பங்களிப்பாகும். - ஆ. இரா. வேங்கடாசலபதி
Book Details
Book Title நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும் (Needamangalam Saathiya Kodumaiyum Dravida Iyakkamum)
Author ஆ.திருநீலகண்டன் (A.Thiruneelakandan)
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 160
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

“நன்றாகப் படித்திருப்பதால், நான் பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்ததாகக் கல்லூரியின் முதல்வர் குறிப்பிட்டார்” - புத்தகத்தின் இடையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் ஏ.என். சட்டநாதன். உயர் சாதியினர்தான் படித்தவர்கள் என்ற சூழல் நிலவிய இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ..
₹323 ₹340