Menu
Your Cart

நீதிக்கட்சி வரலாறு

நீதிக்கட்சி வரலாறு
-5 %
நீதிக்கட்சி வரலாறு
₹94
₹99
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பண்டித முத்துசாமிப் பிள்ளையின் நீதிக்கட்சி வரலாறு குடிஅரசு இதழ் மதிப்புரையின்படி 1940ஆம் ஆண்டு அதன் முதல் பதிப்பு வெளியாகி இருக்கிறது என்பதை உறுதியாக நம்பலாம். அடுத்து நாம் பார்க்க வேண்டியது இந்நூலில் இருக்கும் உள்ளடக்கம் நமக்குச் சில அக்காலத்தில் நிகழ்ந்த முக்கியச் செய்திகளை முன் வைக்கிறது. அதனை நாம் நூலினுள்ளே இருக்கிறபடி 'அது என்ன செய்தி' என்பதை தெளிவாக்க விரும்புகின்றோம். இவ்வாய்வுரைக்குப் பிறகு பண்டிதரின் நூலைப் படிக்க முனைவோர் இச்சிறு நூலின் அகன்றாழ்ந்த அடர்த்தியை அறிந்து கொள்வர். நீதிக்கட்சியைத் தொடங்குவதற்கு முன்னுள்ள சூழ்நிலையை மிகச் சுருக்கமாக எடுத்து வைக்கும் இந்நூல் அதன் கடைசிப் பத்தியில் இந்தியாவுக்கு சுயாட்சி வழங்கப்படுமானால் பார்ப்பனர் அல்லாதாரின் நிலைமை எவ்வளவு கேவலமாகும் என்கிற அச்சத்தை வெளிப்படுத்துகிறது. அதோடு 1916க்கு முன் என்று தலைப்பிடப்பட்டுள்ள அத்தியாயத்தில் முக்கியச் செய்தியாக இந்நூலினைப் படிப்போர் கவனிக்க வேண்டிய புள்ளிகள் சில இருக்கின்றன. அதாவது கிழக்கிந்திய கம்பெனியார் இங்கே வந்து அதிகாரத்தைப் பற்றியபோது அவர்களிடத்தில் பணியாற்றியவர்கள் பார்ப்பனர் அல்லாதாரே ஆவர். அவர்களுள் இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியவர்கள் ஒடுக்கப்பட்டவர்களே ஆவர். இதனை அயோத்திதாச பண்டிதரும் சொல்கிறார். இதன் பிறகுதான் பார்ப்பனர்கள் கம்பெனியாரின் அதிகாரத்திற்குள் நுழைந்து பதவியைப் பெறுகிறார்கள். இதனை எடுத்துச் சொல்கிறார் பண்டித முத்துசாமிப் பிள்ளை அவர்கள். மேலும் பார்ப்பனர்களைக் கைதூக்கிவிட்ட பார்ப்பனர் அல்லாதவர் பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார்.
Book Details
Book Title நீதிக்கட்சி வரலாறு (Needhikatchi varalaru)
Author பண்டிதர் எஸ்.முத்துசாமிப்பிள்ளை (Pantidhar Es.Muththusaamippillai)
Publisher தளபதி பதிப்பகம் (Thalapathy Publication)
Pages 80
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha