Menu
Your Cart

நீல பத்மநாபன்168 சிறுகதைகள்

நீல பத்மநாபன்168 சிறுகதைகள்
-5 %
நீல பத்மநாபன்168 சிறுகதைகள்
நீல.பத்மநாபன் (ஆசிரியர்)
₹808
₹850
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கதை, கவிதை, நாவல்களில் சாதனைப் படைத்த நீல பத்மநாபனின் கடந்த, ஏறத்தாழ அறுபதாண்டு கால எழுத்தாக்கத்தில் அறுவடையான 168 கதைகளின் படையல் - முழுத் தொகுதி இது. கதைக் கருவின் தேர்வில் சமூகப் பிரக்ஞையும், கையாளும் முறையில் கலை நேர்த்தியும், நேர்மையும் கொண்டவை இக்கதைகள். குங்குமமிருந்தச் சிமிழ் போல், கஸ்தூரி இருந்த பெட்டகம் போல், வாசித்த பின்னரும் நம் உணர்வுகளை விட்டு அகலாதவை. நம் சிந்தையில் தங்கி நின்று இலக்கிய இன்பம் வழி, வாழ்க்கையைப் பற்றிய நமது பார்வையை விஸ்தரிப்பவை... காலத்தைக் கடந்து வந்திருக்கும் இக்கதைகளில் மரபின் மாண்பு, ஆன்மிகத்தின் அடிச்சுவடுகள், புதுமையின் பண்பு. தொன்மங்களின் அழகியல், அங்கதச் சுவைகள், சூசகங்கள் போன்றவை உளவியல் பாங்குடன் ஆரவாரமின்றி, அடக்கமாக அரங்கேறி யிருக்கின்றன. வாசிப்புக்கும், மறுவாசிப்புக்கும், பாதுகாப்புக்கும் உகந்தவை. 20 நாவல்கள், 12 சிறுகதைத் தொகுதிகள், 5 கவிதைத் தொகுதிகள். 11 கட்டுரைத் தொகுதிகள் மற்றும் 1 நாடகத் தொகுதி இவரின் படைப்பாக்கங்கள்... வெளியீடுகள்... அனைத்திந்திய மொழிகளுக்கும், ஆங்கிலம், ஜெர்மன், ரஷியன் போன்ற உலக மொழிகளுக்கும் சென்று, தமிழுக்குப் பெருமை சேர்த்த இவர் படைப்புகள் பல. சாசித்திய அகாதமி பரிசு, அண்ணாமலைச் செட்டியார் பரிசு, இலக்கியச் சிந்தனை பரிசு உள்ளிட்ட விருதுகள் பல இவரைத் தேடி வந்திருக்கின்றன. சென்ற ஆண்டு (2013) பவள விழா கண்ட நீல பத்மநாபனுக்கு வானதியின் பவள விழா படையல், இந்த முழு சிறுகதைத் தொகுதி.
Book Details
Book Title நீல பத்மநாபன்168 சிறுகதைகள் (நீல பத்மநாபன்168 சிறுகதைகள்)
Author நீல.பத்மநாபன் (Neela.Padmanaban)
Publisher வானதி பதிப்பகம் (Vanathi pathipagam)
Year 2013
Edition 1
Format Hard Bound
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

‘நாவல்’ என்பது நவீன இதிகாசம். வாழ்வை இதிகாசம் போல் சித்தரிப்பவனே உயர்ந்த படைப்பாளி. நீல. பத்மநாபனிடம் இந்த அம்சம் மேலோங்கியிருக்கிறது. வாசகனுக்கு இதிகாச உணர்வைத் தரும் நவீனத் தமிழ் நாவல்கள் வெகு சொற்பம். மகத்தான நாவலாசிரியர்களோடு வைக்கத் தகுந்தவர் நீல. பத்மநாபன். ‘தலைமுறைகள்’ ஒரு நவீன இதிகாசம்..
₹447 ₹470
காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவரும் ‘பள்ளிகொண்டபுரம்’ நீல. பத்மநாபனின் நாவல்களில் முதன்மையானது என்று சொல்லலாம். அனந்த நாயரின் துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த நாவலில் கேரளத்தின், திருவனந்தபுரத்தின் நேற்றைய - இன்றைய கலாச்சார வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது. மலையாள நாவலாசிரியர்களில..
₹333 ₹350
நீல. பத்மநாபனின் கவனிக்கத்தக்க சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல்...
₹190 ₹200
நீல. பத்மநாபனின் கவனிக்கத்தக்க சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். இதனை சிறுகதைத் தொகுப்பு என்று சொல்வதைக் காட்டிலும் யதார்த்த வாழ்வின் அழுத்தமான வார்ப்பு என்று சொல்வதே மிகப் பொருத்தமானது. ஒவ்வொரு கதைகளுக்குள்ளும் நுழையும் போது காகிதத்தில் கண் பதிக்கும் உணர்வையும் மறந்து, கதைக் களத்தில் கால் பதிக்க..
₹76 ₹80