Menu
Your Cart

நீரதிகாரம் (தொகுதி 1 & 2)

நீரதிகாரம் (தொகுதி 1 & 2)
நீரதிகாரம் (தொகுதி 1 & 2)
நீரதிகாரம் (தொகுதி 1 & 2)
நீரதிகாரம் (தொகுதி 1 & 2)
நீரதிகாரம் (தொகுதி 1 & 2)
அ.வெண்ணிலா (ஆசிரியர்)
₹1,500
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வரலாற்றில் இடம்பெற்று, வரலாறாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் இடங்கள் பல உள்ளன. ஆனால் அந்த இடங்களெல்லாம் வெறும் காட்சிப் பொருளாகவே இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள ஒரு வரலாற்று இடம், இரண்டு நூற்றாண்டுகளாக நீண்ட வரலாற்றைத் தாங்கிக்கொண்டு கோடிக்கணக்கான மக்களுக்கு இன்றும் பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆமாம். அதுதான் முல்லைப் பெரியாறு அணை. பென்னிகுக் எனும் பெரும் மனிதம் கொண்ட மாமனிதனின் விடா முயற்சியாலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் கடும் உழைப்பாலும் உருவான முல்லைப் பெரியாறு அணை கட்டுமானம், சாதாரணமாக நிகழ்ந்துவிட்ட ஒன்றல்ல என்பதை எழுத்தாளர் அ.வெண்ணிலா தன் விறுவிறு எழுத்தால் விவரித்து ஆனந்த விகடனில் 122 வாரங்கள் எழுதினார். ஒரு தொடர் இவ்வளவு நீண்ட நாள் எழுதப்பட்டதிலிருந்தே, அந்தத் தொடருக்கு வாசகர்களின் வரவேற்பு எப்படியிருந்தது என்பது புலனாகும். திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் சென்னை மாகாணத்துக்கும் இடையே அணை கட்டுமான ஒப்பந்தம் ஏற்படும் முன்பே, இருந்த சிக்கல்கள், நிபந்தனைகளில் ஆரம்பித்து, அணை கட்டுமானம் முடிப்பது வரை மிக விரிவாகவும் அழகாகவும் விவரித்து பெரும் வரலாற்றுப் புதினமாகத் தந்திருக்கிறார் எழுத்தாளர் அ.வெண்ணிலா. 150 ஆண்டுகளுக்கு முன் மிக உயர்ந்த மலைமேல் கட்டப்படும் அணைக்கு கட்டுமானப் பொருள்களை எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிரமங்கள், காலரா நோய் பரவி தொழிலாளர் பலரைப் பலிவாங்கிய துயரம், காட்டு மிருகங்களின் அச்சுறுத்தல், இயற்கை இடர்ப்பாடுகள் என பல இன்னல்களுக்கிடையே நடைபெற்ற பெரியாறு அணையின் கட்டுமானப் பணி எத்துணை சவால் நிறைந்தது என்பதை வாசகர்களின் கண் முன்னே நிறுத்துகிறது இந்த நீரதிகாரம். ‘முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் பென்னிகுக்' என அந்த அணை பற்றி சில வார்த்தைகளிலேயே அறியப்பட்டிருந்தது. ஆனால், அணை கட்டுமுன் இருந்த சிக்கல்களையும் அணை கட்டு மானத்தின்போது நடந்த துயரங்களையும், பெரும் முயற்சிகளையும் சொல்லிக்கொண்டு பெரும் வரலாறாகப் பாய்ந்து செல்கிறது இந்த நீரதிகாரம்!
Book Details
Book Title நீரதிகாரம் (தொகுதி 1 & 2) (Neeradhigaram)
Author அ.வெண்ணிலா (A.Vennila)
ISBN 978-93-94265-17-2
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Published On Jan 2024
Year 2024
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Historical Novels | சரித்திர நாவல்கள், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

1930 – 2004 வரை எழுதி வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார் கவிஞர் அ. வெண்ணிலா. கடினமான வேலையை எடுத்துக்கொண்டு, பெண்களின் சிந்தனைப் புரட்சியை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். பெண்களின் உணர்வுகள் நுட்பமாக வெளிப்படுகின்றன. கோதைநாயகி அம்மாளில் ஆரம்பித்து வெண்ணிலா வரைக்கும் ரசிக்கத்..
₹475 ₹500
தேர்தலின் அரசியல்‘அரசியல் கட்சிகள் இட ஒதுக்கீட்டை நிறைவு செய்ய பெண் வெட்பாளர்களை அறிவித்தால் மட்டும் போதாது.அவர்களின் சிதந்திரமான செயல் பாட்டையும் தீர்மானிக்க வேண்டும்.பெண் பிரதிநிதிகளின் அதிகாரத்தைக் கைப்பற்றும் குடும்பத்தின் பிற ஆண்களை கட்சியில் அனுமதிக்கக் கூடாது.’‘விதை இருக்கிறது,மருந்து இருக்கி..
₹86 ₹90
நூறு களிறுகளைப் போரில் கொன்று குவிக்கும் வீரனுக்கும், எதிரிகளே இல்லையென்னும் மாவீரனுக்கும், விரிந்து பரந்த ராஜ்ஜியத்தின் அரசனுக்கும், சட்டிச் சோறு வாங்கிச் சாப்பிட்டுக் காலம் கடத்தும் பரதேசிக்கும், செல்வத்தில் திளைக்கும் வணிகனுக்கும், சமன் குலைந்த நடத்தையுடன் இருக்கும் பித்தனுக்கும் நினைவுகள் ஒன்றே ..
₹500