Menu
Your Cart

நீர்வழிப் படூஉம்

நீர்வழிப் படூஉம்
Hot -5 %
நீர்வழிப் படூஉம்
தேவிபாரதி (ஆசிரியர்)
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
“குற்றம் – மன்னிப்பு – ஏற்றுக்கொள்ளல் என்று இந்நாவல் செல்கிறது. இந்நாவலின் மனிதர்கள் அவர்களின் அத்தனைத் தவறுகளுக்கும் மன்னிக்கப்படுகிறார்கள்; அவர்களின் அத்தனைக் குறைகளோடும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்; வறுமையும் அலைக்கழிப்பும் தொடர்ந்து விரட்டும் வாழ்வில் தங்களுக்கான ஆசுவாசத்தை நிபந்தனையற்ற மன்னிப்பின் வழியாகவும், எதிர்பார்ப்பற்ற அன்பின் வழியாகவும் தேடிக்கொள்கிறார்கள். நீர்வழிப் படூஉம் புணைபோல் இந்நாவல் அன்பின் வழி சேர்கிறது.” தேவிபாரதி அவர்களின் ‘நீர்வழிப் படூஉம்’ நாவல் குறித்து எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன் பகிர்கிற வார்த்தைகள் இவை. குடிநாசுவர் எனப்படும் சிறுகுடி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியை, அவனுடன் சமூகம் கொள்ளும் உள்ளார்ந்த உறவைச் சித்தரிக்கிறது இந்நாவல். தமிழின் சிறந்த நாவல் வரிசையில் நிலைகொள்ளும் இந்நாவல் தன்னறம் நூல்வெளி வாயிலாக இவ்வாண்டு வெளியாகிறது. நொய்யல்கரை மனிதர்களின் வாழ்வுப்புலத்தையும், அவர்தம் உளவியல் சலனங்களையும் அங்குள்ள சமூகப் பின்னணியில் நிறுவி ஆராயும் புனைவுப்போக்கு தேவிபாரதியை தமிழின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவராக இடங்கொள்ளச் செய்கிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக இவரது இலக்கிய மனம் படைத்துக் கொண்டிருக்கிறது. இவருடைய நாவல்கள் இவருக்குரிய இலக்கிய இடத்தை பறைசாற்றவல்லன. அவைகளிலுள்ள வடிவ ஓர்மையும் செறிவான வட்டார மொழிநடையும் புனைவுப்படைப்புகளை ஆழமுறச் செய்கின்றன. “ஒரு படைப்பாளியாக தேவிபாரதியின் இடம் என்பது சென்றகாலத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் மனிதர்களில் மீட்பில்லாது அழிபவர்களின் துயரத்தைச் சொன்னார் என்பதுதான். அதன் வழியாக வரலாற்றில் எளியமனிதர்களின் இடமென்ன என்னும் ஆழமான வினாவை எழுப்புகிறார்.” என தமிழ்.விக்கி இவரைப்பற்றி குறிப்பிடுகிறது.
Book Details
Book Title நீர்வழிப் படூஉம் (Neervazhi padoom)
Author தேவிபாரதி (Devibharathi)
ISBN 9789395560047
Publisher தன்னறம் நூல்வெளி (Thannaram Publications)
Published On Dec 2022
Year 2024
Edition 02
Format Paper Back
Category Novel | நாவல், Literature | இலக்கியம், 2023 Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தேவிபாரதியின் சிறுகதைகள் கதையாடல் என்ற அளவில் தெளிவாகக் கட்டமைக்கப்பட் டிருப்பவை. பெரிதும் ஆண்-பெண் உறவுகளை மையமாகக் கொண்டுள்ள அவரது கதை கூறல் முறை ஒரு குறுகிய வெளியில் இறுக்கமான முடிவை நோக்கி இழுத்துச் செல்லப்படும் பிரமையை ஏற்படுத்துகிது. நவீனத்துவவாதிகளில் பலருடையதையும் போல த்ரில்லருக்கான கூறுக..
₹238 ₹250
ஓர் அபத்தமான நாள் முப்பது வருட நீட்சியுடன் முடிவடையாமல் தொடர்வது எப்படி? அது முடிவடையும் கணத்தில் மானுடக் கருணையின் மாபெரும் வெறுமை கவிவது ஏன்? இந்த இரண்டு கேள்விகளுக்கு இடையிலான பதிலைத் தேடுகிறது ‘நிழலின் தனிமை’. காமம், அதையொட்டிய அதிகாரம், அதற்கெதிரான வஞ்சினம், பழி தீர்க்கும் வெறி என்று மன இருளி..
₹209 ₹220
அரசியல் விதிவிலக்கில்லாமல் எல்லோரது வாழ்வையும் பாதிக்கிறது. முக்கியமாக அது எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. அதனோடு எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பாதபோதும் அது எல்லோரையும் உருக்குலைக்கிறது. அரசியலற்ற ஒரு கருத்தோ செயலோ அநேகமாக இல்லை என்னும் கருத்து எந்த அளவுக்குப் பழ..
₹171 ₹180