-4 %
Out Of Stock
நேரு வழக்குகள்
ஞாலன் சுப்பிரமணியன் (ஆசிரியர்)
₹86
₹90
- Page: 176
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நூலின் தலைப்பே சுவையானது. விடுதலைப் போராட்ட வீரர் என்ற வகையில் பண்டிட் ஜவஹர்லால் பல்வேறு வழக்குகளை எதிர் கொண்டிருப்பார். அதற்கான தண்டனை பெற்றிருப்பார்; அல்லது விடுதலை செய்யப்பட்டிருப்பார். இதற்கு மேல் எதுவும் அவர் வாழ்க்கை வரலாற்றில் பொதுவாக இடம் பெறாது. ஆயினும் அவ்வழக்குகளை மட்டும் தனித்துப் பார்க்கும்போது அங்கே ஒரு புதிய வரலாற்றுப் பார்வை; தனி மனித மதிப்பீடு புலனாகும். அதற்கு இந்நூல் உதவும். நேரு வழக்குகளில் பல சுவையான அம்சங்களை இந் நூல் தருகிறது. நீதிமன்ற விசாரணை முறைகளை மட்டுமல்ல, நேரு விடுத்த பல அறிக்கைகளையும் இதில் தந்துள்ளார். சில கடுமையான அதிர்ச்சிகளை தருகிறது. பொதுவாக விடுதலைப் போராட்டமும் நேரு வாழ்க்கையும் பிரிக்க முடியாதபடி பின்னிப்பிணைந்துள்ளதுபோல இந்நூல் விடுதலைப் போராட்ட சுருக்க வரலாறாகவும் மாறிப்போயுள்ளது. இந்நூலில் முதல் வடிவத்தை 46 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கியதாகக் கூறுகிறார் நூலாசிரியர். இப்போதாவது வந்ததே என மகிழ்கி றோம். “நாட்டில் பசியுடன் வாடும் வயிறுகளுக்கு உத்தரவுகளும் அவசர சட்டங்களும் உணவு தரப்போவதில்லை” என்ற புரிதலும் அதன் தொடர்ச்சியாக வீறுகொண்டெழும் மக்கள் இயக்கம் பற்றிய நேருவின் புரிதலும் இந்நூல் மூலம் படிக்கிறபோது நமக்கு தற்கால அரசியல் நிலை நினைவுக்கு வராமல் போகாது.
Book Details | |
Book Title | நேரு வழக்குகள் (Nehru Vazhakkugal) |
Author | ஞாலன் சுப்பிரமணியன் (Gnalan Subramanian) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 176 |
Category | இந்திய வரலாறு |