Menu
Your Cart

கடல்

கடல்
-5 %
கடல்
கமலதேவி (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கமலதேவியின் கதைகள் காட்சிகளாக விரிபவை. காட்சிகளின் வழியாகவும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உரையாடல்களின் மூலமாகவும் அவர்களுடைய வாழ்வு முழுவதையும் சொற்களாகவும் உணர்ச்சிகளாகவும் சொல்பவை. வெறும் கதை சொல்லலாக மட்டும் அவை நின்றுவிடுவதில்லை. உறவுகளுக்குள் ஏற்படும் பல்வேறு மோதல்களையும் அவற்றின் ஆழங்களையும் அபத்தங்களையும் தொட்டுக் காட்ட முயல்கின்றன. விவசாயத்தில் தொழிற்படும் மண் சார்ந்த நுட்பங்களைப் பேசுகின்றன. கிராமத்து வாழ்வில் இன்னும் எஞ்சியிருக்கும் நம்பிக்கைகளை, மதிப்பீடுகளை, விழுமியங்களை நினைவுபடுத்துகின்றன. ஒட்டுமொத்தமாக வாழ்வின் பொருள் குறித்தும் அல்லது பொருளின்மையைக் குறித்துமான பலமான கேள்விகளை எழுப்புகின்றன. எந்தவொரு கதையையும் அவை முழுமையாக விரித்துச் சொல்வதில்லை. கதையின் மையத்தை மிகக் குறைவான சொற்களில் அவை குறிப்புணர்த்துகின்றன. சம்பவங்களை அல்லாது அவற்றுக்கு முன்னும் பின்னுமான உணர்வு நிலைகளையே முதன்மைப்படுத்துகின்றன. இதனால் கதையை வாசித்து முடித்த பின்பும் ஏதோவொன்று முழுமையடையாதது போலொரு உணர்வை ஏற்படுத்துகின்றன. ஆனால், அந்த உணர்வுக்குப் பின்னால் அழுத்தமான சில கேள்விகளை எழுப்புவதன் வழியாக கதையைக் குறித்து மீண்டும் யோசிக்கச் செய்கின்றன. எனவே, அவை வழக்கமான கதைப்பாணியிலிருந்து மாறுபட்டு கலைத்துப் போடப்பட்ட சித்திரங்களாகவே காணக் கிடைக்கின்றன. சரியான முறையில் ஒவ்வொரு துண்டையும் சேர்க்கும்போது மட்டுமே மொத்த உருவமும் புலப்படும்.
Book Details
Book Title கடல் (kadal)
Author கமலதேவி
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கமலதேவியின் கதைகளில் வெளிப்படும் மாந்தர்கள் ஒருவகையில் தாஸ்தாவெஸ்கி கதை மாந்தர்களுடன் ஒப்பிடத் தக்கவர்கள். கூர்மையான சுயப் பிரக்ஞையே பிணியாகவும் வதைக்கும் தன்மை கொண்டவர்கள். திருமணம், பணி என பிடிவாதமாக சமூக அழுத்தங்களில் தங்களின் தேர்வுகளின் பக்கம் நிற்பவர்கள். மறுபுறம் அவர்கள் பார்த்து வளரும் பாட்ட..
₹133 ₹140
ராகாரம் பருகின மாதிரி சுகமான இந்த வட்டார வழக்குகள், கதைகளில் ஒலிக்கும்போது எங்கிருந்து புறப்பட்டு வந்திருக்கிறார் கமலதேவி என்று தேட வைக்கிறது. திருச்சிக்கும் நாமக்கல்லுக்கும் எட்டிய கடைக்கோடி கொல்லிமலை அடியிலிருந்து உச்சிவரை எழும் இந்தக் குரல்கள் சிறுகதைக்குள் புதிது. அவர்கள் உலவும் நிலவெளியும் தான்..
₹124 ₹130
இந்தக் கதைகளில் இடம்பெறும் கிராம மக்களின் வாழ்க்கையும், கிராமங்களின் நிலப்பரப்பும் மிகத் துல்லியமாக சித்தரிக்கப் பட்டிருக்கின்றன. நிலம் முக்கியக் கூறாக இருக்கிறது. பல கதைகளில் நிலமும் கால்நடைகளும் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன. விவசாயத்தை தொழிலாக மாற்றுவது என்பது மிக முக்கியமான விஷயமாக ..
₹143 ₹150