-5 %
நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்?
நா.வீரபாண்டியன் (ஆசிரியர்)
₹285
₹300
- Edition: 1
- Year: 2022
- ISBN: 978-93-90811-42-7
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஜவஹர்லால் நேரு மறைந்து அய்ம்பெத்தெட்டு ஆண்டுகள் ஆன பின்னரும் இந்திய நாட்டின் அரசியலில் பெரும் ஆதிக்கம் செலுத்தவல்ல ஆளுமை அவருடையதாக இருப்பதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. உலக அரங்கில், விடுதலை பெற்ற இந்தியாவிற்கு பெருமையும், மரியாதையும் கூடுவதற்கு பெரும் பணி ஆற்றியவர் நேரு. நவீன இந்தியாவை செதுக்கிய சிற்பி என்று அவர்தம் அரசியல் பகைவர்களும் சொல்லத்தக்க வகையில் இந்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஓயாது உழைத்தவர் அவர். விடுதலை பெற்ற பின் தொடர்ந்த இரு பத்தாண்டுகளில் இந்தியாவின் ஒற்றை முகமாய் உலக மக்கள் மனங்களில் பதிந்தவர்.
காஷ்மீர் பிரச்சினை, இந்தியாவை ஒருங்கிணைத்தல், இந்திய சீன எல்லைப் பிரச்சினை ஆகியவற்றில் நேருவை வசைபாடுபவர்களுக்கு தக்க பதில் இந்நூலில் இருக்கிறது. இந்தியாவில் நிகழும் ஒவ்வொரு அரசியல் சம்பவமும் மக்கள் மத்தியில் பதட்டத்தையும், இந்திய ஒருமைப்பாட்டிற்கும், மதச்சார்பின்மைக்கும் ஊறு நேர்ந்து விடுமோ என்ற அச்சத்தையும் அன்றாடம் உண்டாக்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்நூலின் வரவு ஜனநாயகத்தின் கோட்பாடுகளில் நாம் வைத்திருக்கும் நம்பிக்கை தகர்ந்து போய் விடாமல் தடுக்கவும், மதவெறி அரசியலை முற்றாக ஒழிக்கவும் நேருவின் காலத்தால் என்றும் அழியாத, யாராலும் அழிக்கமுடியாத கொள்கைகள் பேராயுதமாய் நமக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை.
Book Details | |
Book Title | நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்? (Nehru mel ivargalukku yen indha kovam) |
Author | நா.வீரபாண்டியன் |
ISBN | 978-93-90811-42-7 |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Politics| அரசியல், Essay | கட்டுரை, 2022 Release |