Menu
Your Cart

ரெண்டாம் ஆட்டம்

ரெண்டாம் ஆட்டம்
-10 %
ரெண்டாம் ஆட்டம்
₹585
₹650
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மனித மனம் பலவித வண்ணங்களைக் கொண்டது. அது எப்போது எந்த வண்ணத்தை வெளிப்படுத்தும் என்பது சூழ்நிலையைப் பொருத்தது. ஆனாலும் கோபம் எனும் வண்ணம்தான் மனிதனின் எல்லா வன்முறைக்கும், தவறுகளுக்கும் அடிப்படையாகிறது. நேரான வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என நோக்கம்கொண்டவர்கள் பலரை கோபம், குரோதம் போன்றவை திசைமாற்றி வன்முறையின் பக்கம் இடறிவிடுகின்றன. வன்முறை உலகத்துக்குள் சென்றவர்கள் அதிலிருந்து வெளியே வரமுடியாமல் தங்கள் வாழ்வை இருள்களிலேயே முடித்துக் கொள்கிறார்கள். தூங்கா நகர் மதுரையையும் அதைச் சுற்றிலும் உள்ள பகுதிகளையும் கதைக்களமாகக் கொண்ட இந்த ரெண்டாம் ஆட்டம், ஆத்திர மனிதர்களும் சூழ்நிலையால் திசைமாறிய மனிதர்களையும், பழிக்குப் பழி என பகை கொண்டு உலவும் மனிதர்களையும் காட்டுகிறது. விறுவிறுப்பாகவும் எதிர்பாரா திருப்பங்களையும் கொண்டு ஜூனியர் விகடனில் வெளிவந்த ரெண்டாம் ஆட்டம் வாசர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் தொகுப்புதான் இது. கோபத்தில் எழும் மனிதர்களை பகடைகளாக்கி விளையாடும் வன்முறை அவர்களை எப்படியெல்லாம் கலைத்துப்போட்டு விடுகிறது என்பதை இந்த ரெண்டாம் ஆட்டம் சொல்கிறது. இனி, ரத்தச் சகதியில் நடந்தேறும் ரெண்டாம் ஆட்டம் காணுங்கள். ``எத்தனை கதைகளைச் சொன்னாலும், மதுரையும், அந்த மண்ணின் மனிதர்களின் கதையும் ஒருபோதும் தீராதவையாகத் தோன்றுகின்றன. இது மதுரையைப் பின்புலமாகக்கொண்ட இன்னொரு கதையல்ல. இதுவரையிலும் மற்றவர் பார்க்காத இருள் வீதிகளுக்குள் பயணிக்கப்போகும் கதை. தேவைகளுக்கும் ஆசை களுக்குமான போராட்டத்தில் மனிதன் எப்போதும் ஆசைகளிடம் தோற்றேபோகிறான். நட்பு, காதல், சகோதரத்துவம் என மனிதனின் சந்தோஷமான எல்லா உணர்ச்சி களின் நிழலாகவும் தொடர்வது துரோகம். தேவைகளுக்காக மனிதர்கள் அணிந்து கொள்ளும் முகமூடிகளையும், துரோகங்களையும், அந்த துரோகத்தால் நிகழும் கொலைகளையும் பேசும் கதையிது. தூங்கா நகரத்தின் துரோகக் கதைகளுக்குள் இணைந்தே தொடர்வோம்...’’ என்று இந்தக் கதை பற்றிச் சொல்கிறார் எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார்.
Book Details
Book Title ரெண்டாம் ஆட்டம் (Rendam Aatam)
Author லஷ்மி சரவணகுமார் (Lakshmi Saravanakumar)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Published On Feb 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha