Menu
Your Cart

தொடக்க கால இஸ்லாம் ஒரு சமூக-பண்பாட்டு பார்வை

தொடக்க கால இஸ்லாம் ஒரு சமூக-பண்பாட்டு பார்வை
-5 %
தொடக்க கால இஸ்லாம் ஒரு சமூக-பண்பாட்டு பார்வை
எம்.எஸ்.எம். அனஸ் (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தொடக்க கால இஸ்லாம் பற்றித் தமிழ்ச் சூழலில் குறைவாகவே பேசப்படுகிறது. ஆனால் இன்று உலகெங்கும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளிடையே இஸ்லாத்தின் தோற்றக் காலத்தையும் நபிகளாரின் பணிகளில் அரசியல்-பொருளாதாரப் பின்னணியையும் அறிந்துகொள்ளும் ஆர்வமும் அதிகரித்து வருகின்றன. இந்த நூலில் எம்.எஸ்.எம். அனஸ் சமூகப் பண்பாட்டியல் நோக்கில், இஸ்லாத்தின் தோற்றத்தையும் இஸ்லாத்திற்கு முற்பட்ட அரபுச் சமூகத்தின் வழிபாடுகள், சமூக அமைப்புகள் பற்றியும் ஆராய்கின்றார். ஒரு சமயத்தின் தோற்றத்தை நிர்ணயிப்பதில் சமூகவியல், அரசியல், பொருளாதாரம் முதலியவை ஏற்படுத்தும் தாக்கங்கள் எவ்வகையானவை என்பதே இந்த நூலின் மையக் கேள்வி. இஸ்லாம் தோன்றிய மக்கா ஒரு வணிக நகரம். ஆனால் பூர்வீகத்தில் அது நாடோடி பதாவிகளின் பூமி. நாடோடிப் பொருளாதாரம் வணிகப் பொருளாதாரமாக மாற்றமடைந்ததும், பழங்குடிச் சமுதாயம் அரசியல் சமூகமாகியதும், பல தெய்வ வழிபாடுகளை ஓரிறைவாதம் நிறைவு செய்ததும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல. ஒரு சமுதாயப் புரட்சிக்கான சூழல் அங்கு உருவாகிக்கொண்டிருந்தது. சிதறிக்கொண்டிருந்த பழங்குடி அமைப்பை ஒருங்கிணைத்து, பெருவணிக ஆதிக்கத்தைத் தகர்க்கும் தலைமைத்துவப் பொறுப்பை நபிகளார் ஏற்கிறார். சீர்திருத்தங்களின் மூலம் ’உம்மா’ என்னும் புதிய ஐக்கியச் சமூகத்தையும் புரட்சிகர பண்பாட்டையும் அவர் கட்டி எழுப்புகிறார். இதன் வரலாற்றுப் பின்னணியை அனஸ் இந்த நூலில் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். பழங்குடிச் சமுதாய மரபுகளில் நிகழும் மாற்றங்கள் வரலாற்றுப் பூர்வமானவை. இந்த வரலாற்று நிகழ்வை மார்க்ஸ், எங்கெல்ஸ், மோர்கன், பெக்கோபன் போன்றோரின் அணுகுமுறைகளின் வழியாக விளக்குகிறார் நூலாசிரியர். சமயத்திலும் பண்பாட்டு அரசியலிலும் ஆர்வமுள்ளவர்கள் படிக்கவேண்டிய ஒரு முக்கியமான புத்தகம்.
Book Details
Book Title தொடக்க கால இஸ்லாம் ஒரு சமூக-பண்பாட்டு பார்வை (Thodaka kala Islam)
Author எம்.எஸ்.எம். அனஸ் (M. S. M. Anas)
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 248
Published On Nov 2021
Year 2022
Edition 1
Format Paper Back
Category Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha